Breaking News
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.
Tuesday, December 24, 2013
மன்னார் திருக்கேதிஸ்வரத்தில் 10 இற்கும் மேற்பட்ட மனித எச்சங்கள் மீட்பு!
மன்னார் திருக்கேதிஸ்வரம் பகுதியில் இது வரை 10 இற்கும் மேற்பட்ட மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளது.மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் முன்னிலையில் இரண்டாவது நாளாகவும் இன்று ஞாயிற்றுக்கிழமை மனித புதை குழி தோண்டப்பட்டு மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளது.
மன்னார் திருக்கேதிஸ்வரம் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளமையினைத் தொடர்ந்து குறித்த பகுதியில் நேற்று சனிக்கிழமை மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் முன்னிலையில் மனித புதைகுழிகள் தோண்டும்; பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை மாலை தோண்டப்பட்ட போது மூன்று மனித மண்டையோடுகளும்,ஏனைய பாகங்களும் மீட்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மன்னார் காவல்துறையினர் குறித்த சம்பவம் தொடர்பாக மன்னார் நீதவானின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.இந்த நிலையில் நேற்று சனிக்கிழமை காலை 10 மணியளவில் மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டார்.
பின் மன்னார் நீதவான் மற்றும்; சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் மனித எச்சங்கள் மீட்கப்பட்ட புதை குழி தோண்டப்பட்டது.இதன் போது மேலும் சிதைவடைந்த நிலையில் துண்டு துண்டுகளாக மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று சனிக்கிழமை மாலை மேலும் இரண்டு மண்டையோடுகளும்,மனித எச்சங்களும் மீட்கப்பட்டது.இந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இரண்டாவது நாளகவும் மன்னார் நீதவான் முன்னிலையில் மனித புதைகுழி தோண்டப்பட்டது.
இதன் போது மேலும் பல மண்டையோடுகளும் மனித எச்சங்களும் மீட்கப்பட்டுள்ளது.இது வரை 10 மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளது.மேலும் பல மனித எச்சங்கள் அப்பகுதியில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.மேலும் பல மனித எச்சங்கள் மீட்கப்படலாம் என எதிர் பார்க்கப்படுகினறது.
இன்று காலை 10 மணிமுதல் 12 மணிவரை மனித புதை குழி தோண்டப்பட்ட நிலையில் தற்போது குறித்த பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது.குறித்த மனித புதை குழி தோண்டும் பணிகள் நாளை திங்கட்கிழமை மீண்டும் மன்னார் நீதவான் முன்னிலையில் இடம் பெறவுள்ளது.தற்போது குறித்த பகுதியில் காவல்துறையினர் பாதுகாப்புக்கடமையில் ஈடுபட்டு வருகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)



No comments:
Post a Comment