Breaking News
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.
Thursday, December 19, 2013
பொங்கல் பண்டிகைக்கு வெட்ட தயாராக உள்ள செங்கரும்பு
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை ஆண்டுதோறும், விவசாயிகளால் விவசாயத்திற்கு கைகொடுக்கும் சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.
பொங்கல் பண்டிகையின்போது, வீட்டு வாசலில் பொங்கல் வைத்து, சூரியனுக்கும், வினாயகருக்கும் பொங்கல் படையலிடும்போது, பொங்கல் பானைகளில் மஞ்சள்கொத்து கட்டுவதும், அருகே செங்கரும்பு, வாழைப்பழம் வைத்து, தேங்காய் உடைத்து வழிபடுவதும் வழிவழியாக தமிழர்கள்; செய்து வரும் பாரம்பரிய பழக்கமாகும்.
மேலும் பொங்கல் தினமான தை-1ந்தேதிக்கு அடுத்தநாள் கொண்டாடப்படும் மாட்டுப்பொங்கலின்போதும், காணும் பொங்கலின் போதும் செங்கரும்பு அதிக அளவில் பயன்படுத்தப்படும்.
மற்ற நேரங்களில் தேடினாலும் கிடைக்காத செங்கரும்பு மார்கழி, தை, மாசி மாதங்களில் அதிகஅளவில் எங்கு பார்த்தாலும் விற்பனை செய்யப்படும். இதற்கு காரணம் தைப்பொங்கலை மையமாக வைத்;து செங்கரும்பு சாகுபடி செய்யப்படுவதுதான்.
பொங்கல் பண்டிகைக்காக அதிக அளவு செங்கரும்பு மதுரை மாவட்டம் மேலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. ஆலைக் கரும்பு கூட அதிகம் விளையாத காவிரி பாசனப் பகுதியான அறந்தாங்கியை அடுத்த அரசர்குளம் பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக பொங்கல் பண்டிகைக்காக செங்கரும்பு சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
காவிரிப் பாசனப் பகுதியாக இருந்த போதிலும் அரசர்குளம் பகுதியில் உள்ள விவசாயிகள் தங்களுக்கு சொந்தமான அல்லது அவர்களது உறவினர்களுக்கு சொந்தமான ஆழ்துளைக் கிணறுகள் மூலமே செங்கரும்பு சாகுபடிக்கு தண்ணீர் பாய்ச்சுகின்றனர்.
அரசர்குளம் பகுதியில் உள்ள விவசாயிகள் கடந்த ஆண்டு சுமார் 50 ஏக்கருக்குமேல் செங்கரும்பு சாகுபடி செய்திருந்தனர். கடந்த ஆண்டு ஏற்பட்ட தொடர்மின்வெட்டு காரணமாக செங்கரும்பு சாகுபடி செய்யப்பட்ட வயல்களுக்கு தண்ணீர் பாய்ச்சவே சிரமப்பட்ட விவசாயிகள், ஜெனரேட்டர்கள் மூலம் தண்ணீர் பாய்ச்சி செங்கரும்பை காப்பாற்றி, பொங்கல் பண்டிகைக்கு சில நாட்களுக்கு முன்பு அறுவடை செய்தனர். அப்போது 10 கரும்புகள் கொண்ட ஒரு கட்டு கரும்பின் விலை ரூ.250-க்கு விற்பனையாகும் என்று நினைத்த அரசர்குளம் விவசாயிகளுக்கு வெளியூர்களில் இருந்து வந்து அறந்தாங்கி பகுதியில் விற்பனைக்காக இறங்கிய கரும்புகளால் பெரிய அளவில் இழப்பு ஏற்பட்டது.
மதுரை மாவட்டம் மேலூரில் இருந்து அறந்தாங்கி பகுதிக்கு ஆயிரக்கணக்கான கட்டுகள் செங்கரும்புகள் விற்பனைக்காக வந்தது. இதனால் ஆயிரம் கரும்பு கட்டுகள் விற்கும் பகுதியில் பத்தாயிரம் கரும்பு கட்டுகள் வந்து இறங்கியதால், கரும்பு கட்டின் விலை பல மடங்கு குறைந்ததுடன், ஆயிரக்கணக்கான கரும்பு கட்டுகள் விற்பனையாகாமல் தேங்கியதுடன், அவற்றை விறகாக எரிக்கும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டன.
இதனால் பாதிக்கப்பட்ட அரசர்குளம் பகுதி விவசாயிகள் பலர் இவ்வாண்டு செங்கரும்பு சாகுபடி செய்யாமல், நெற்பயிர் சாகுபடிக்கு மாறினர். இதனால் இவ்வாண்டு சுமார் 25 ஏக்கர் அளவே செங்கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
செங்கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ள வயல்களில் பொங்கல் பண்டிகைக்காக இன்னும் சில நாட்களில் அறுவடை தொடங்க உள்ளது.
இதுகுறித்து அரசர்குளம்கீழ்பாதியைச் சேர்ந்த செங்கரும்பு சாகுபடி செய்துள்ள விவசாயி திருப்பதி தினத்தந்தி நிருபரிடம் கூறியதாவது:
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் செங்கரும்பு சாகுபடியை தொடங்கினோம். கரும்பு சாகுபடிக்கு 10 நாட்களுக்கு ஒருமுறை கட்டாயம் தண்ணீர் பாய்ச்சவேண்டும். அதனால் மின்சார இணைப்புடன் கூடிய ஆழ்துளை கிணறு இருந்தால் மட்டுமே கரும்பு சாகுபடி செய்யமுடியும். எனது உறவினர் வைத்துள்ள ஆழ்துளை கிணறு மூலம் நான் எனது வயலுக்கு தண்ணீர் பாய்ச்சி வருகிறேன். நெற்பயிரைப் போன்றே உரம், பூச்சி மருந்து செலவு, களை அகற்றும் செலவு, பாத்தி அமைக்கும் செலவு உள்ளது.
கரும்பு ஒரு வருடத்து பயிர். பொங்கல் பண்டிகைக்கு மட்டுமே செங்கரும்பு பயன்படும் என்பதால், அப்போது நிர்ணயிக்கப்படும் விலையே எங்களின் லாப-நஷ்டத்தை தீர்மானிக்கும். கரும்பு கட்டு நல்ல விலைக்கு விற்றால், ஆண்டு ஒன்றிற்கு ஏக்கருக்கு செலவுகள் போக சுமார் ரூ.50 ஆயிரம் லாபம் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
அரசர்குளம் கீழ்பாதியைச் சேர்;ந்த கரும்பு விவசாயி சுப்பிரமணியன்; கூறியதாவது:
நாங்கள் பல வருடங்களாக பொங்கல் பண்டிகைக்காக செங்கரும்பு சாகுபடி செய்து வருகிறோம். கடந்த ஆண்டு என்னைப் போன்ற கரும்பு விவசாயிகளுக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டது. இந்த இழப்பு காரணமாக இப்பகுதியில் செங்கரும்பு சாகுபடி பாதியாக குறைந்துவிட்டது. இருப்பினும் நான் பாரம்பரியாக செய்து வரும் செங்கரும்பு சாகுபடியை விட முடியாமல், தற்போதும் செங்கரும்பு சாகுபடி செய்துள்ளேன். இன்னும் சில தினங்களில் கரும்பு வெட்டும் நிலையில் உள்ளது.
கடந்த ஆண்டு அறந்தாங்கி பகுதியில் கரும்பு கட்டுகளை அதிகம் விற்காலம் என்ற எண்ணத்தில் மேலூர் கரும்பு விவசாயிகள் அறந்தாங்கி பகுதிக்கு ஆயிரக்கணக்கான கட்டுகள் கரும்புகளை கொண்டு வந்தனர். ஆனால் அவர்கள் எதிர்ப்பார்ப்பிற்கு மாறாக மிகமிக குறைந்த விலைக்கே கரும்பு விற்பனையானது. இதனால் மேலூர் மற்றும் அரசர்குளம் விவசாயிகள் மிகுந்த இழப்பிற்கு உள்ளாகினர்.
மேலும் கரும்பு விற்பனை குறைந்ததாலும், விலை குறைந்ததாலும் அரசர்குளம் பகுதியில் பல விவசாயிகள் சாகுபடி செய்த செங்கரும்பை வெட்டாமல் விட்ட நிலையும் ஏற்பட்டது. பொங்கல் பண்டிகைக்கு மட்டும் தேவையாக உள்ள செங்கரும்பு விற்பனையாகாவிட்;டால், அவற்றை விறகாக எரிக்கும் நிலைதான் இங்கு உள்ளது. ஆனால் மேலூர் பகுதியில் கரும்புச்சாறு பிழிய செங்கரும்பை பயன்படுத்துவதால் அங்கு பொங்கலுக்கு செங்கரும்பு விற்காவிட்டாலும், விவசாயிகளுக்கு இழப்பு இல்லை.
ஆனால் புதுக்கோட்டை, தஞ்சாவூர் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் கரும்புச்சாறு பிளிய ஆலைக்கரும்பு பயன்படுத்தும் நிலையே உள்ளது. இதனால் நாங்கள் பொங்கல் பண்டிகை விற்பனையை மட்டுமே நம்பும் நிலையில் உள்ளோம். எனவே பொங்கல் பண்டிகைக்கு செங்கரும்பு சாகுபடி செய்யும் விவசாயிகளிடம், தமிழக அரசே நேரடியாக கொள்முதல் செய்து, அவற்றை முறைப்படுத்தி விற்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
நாவிற்கு இனிய சுவைதரும் செங்கரும்பு தமிழர்களின் பண்டிகையான பொங்கல் பண்டிகையோடு பின்னிப்பிணைந்ததாக உள்ளது. ஆனால் அந்த செங்கரும்பை சாகுபடி செய்யும் விவசாயிகளின் நிலைதான் இனிமையானதாக இல்லை என்றால் அது மிகையில்லை.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment