Breaking News

JOINING THE COMMUNITIES--------------------->Contect:as soon as
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016

RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.

Thursday, December 19, 2013

கடும் கண்டனம் :மொல்லா தூக்கிலடப்பட்டது தொடர்பான பாகிஸ்தான் பாராளுமன்றத்தின் தீர்மானத்திற்கு ஷேக் ஹசினா

டாக்கா, டிச. 19- இனப்படுகொலைகள் நடந்தன 1971-ம் ஆண்டு வங்காளதேச விடுதலைக்காக நடைபெற்ற சண்டையின்போது . மைனாரிட்டியாக உள்ள இந்து பெண்கள் கற்பழிக்கப்பட்டனர். இந்த போரின்போது 350 பொது மக்களை கொன்றதாக ஐமாத் இ இஸ்லாமி கட்சியின் மூத்த தலைவர் அப்துல்காதர் மொல்லா மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. போர்க்குற்றம் நிரூபிக்கப்பட்டு, அப்துல்காதர் மொல்லா(75) மீதான மரண தண்டனையை சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் உறுதிப்படுத்தியது. அதன்பின்னர் மொல்லா கடந்த 15-ம் தேதி தூக்கிலிடப்பட்டார். இதையடுத்து வங்காளதேசத்தில் நடந்த கலவரத்தில் 20-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இந்நிலையில், மொல்லா தூக்கிலிடப்பட்டதற்கு எதிராக பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் கடந்த 16-ம் தேதி தீர்மானம் கொண்டுவரப்பட்டது. பாகிஸ்தான் ஜமாத் இ இஸ்லாமி உறுப்பினர் ஷெர் அக்பர் கான் கொண்டு வந்த இந்த தீர்மானம் பெரும்பான்மையான எம்.பி.க்களின் ஆதரவுடன் நிறைவேறியது. பாகிஸ்தானின் இந்த அடாவடியை கண்டு 1971-ம் ஆண்டு இந்தியா முன்நின்று பாகிஸ்தானுடன் நடத்திய வங்காள தேச பிரிவினைப் போரின்போது பாகிஸ்தான் ராணுவ தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களும் அவர்களது வாரிசுகளும் கொதிப்படைந்தனர். பாகிஸ்தானின் செயலை கண்டிக்கும் வகையில், அந்நாட்டுடனான தூதரக உறவுகளை வங்காள தேசம் முறித்துக் கொள்ள வேண்டும் எனவும் அவர்கள் வற்புறுத்தி வருகின்றனர். இதனையடுத்து, தலைநகர் டாக்காவில் உள்ள பகிஸ்தான் நட்டின் உயர் தூதரகம் அருகே ஆர்ப்பாடம் நடத்த நேற்று ஏராளமானவர்கள் ஊர்வலமாக சென்றனர். அவர்களை வழிமறித்த போலீசார் தூதரகம் அருகே நெருங்க விடாமல் தடுத்து நிறுத்தினர். அங்கேயே நீண்ட நேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் பாகிஸ்தானுடனான உறவுகளை வங்காள தேச அரசு முறித்துக் கொள்ளாவிட்டால் நாளை (இன்று) மாலை 3 மணியளவில் பாகிஸ்தான் தூதரகத்தை முற்றுகையிட்டு கைப்பற்றுவோம் என அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதற்கிடையில், வங்காள தேசத்தை கண்டித்து பாகிஸ்தான் பாராளுமன்றம் நிறைவேற்றிய தீர்மானத்திற்கு வங்காள தேச பிரதமர் ஷேக் ஹசினா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கருத்து கூறிய ஷேக் ஹசினா, "1971-ம் ஆண்டு வன்முறை வெறியாட்டஙங்களை நடத்தியவர்களுக்கு எங்கள் நாட்டில் நிழல் அளிக்க மாட்டோம். வங்காள தேசத்துக்கு எதிராக பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியதன் மூலம் வங்காள தேச விடுதலைப் போரின் வெற்றியை பாகிஸ்தான் ஏற்றுக் கொள்ளவில்லை என்பது நிரூபனமாகி விட்டது" என கூறியுள்ளார்.

No comments:

Post a Comment