Breaking News
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.
Wednesday, December 18, 2013
அசாமில் கடந்த 8 ஆண்டுகளில் 14 ஆயிரம் பெண்கள் பலாத்காரம்
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து அசாம் சட்டமன்றத்தில் நேற்று விவாதம் நடைபெற்றது. இதற்கு பதில் அளிக்கும் வகையில் வனத்துறை அமைச்சர் ராக்கிபுல் உசேன் பேசியபோது, ‘’ அசாமில் கடந்த 2005ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டு வரை 40 ஆயிரத்து 96 பெண்கள் பலவகையான தாக்குதல்களுக்கு ஆளாகியுள்ளனர். இதில் 13 ஆயிரத்து 798 பெண் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர். 69 பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர்.
சூனியக்காரி என்ற சந்தேகத்தின் அடிப்படையில் 72 பெண்கள் கொல்லப்பட்டுள்ளனர். வரதட்சணை கொடுமை காரணமாக 1148 பெண்கள் உயிரிழந்துள்ளனர். இந்த குற்றங்கள் தொடர்பாக மொத்தம் 37 ஆயிரத்து 694 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 25 ஆயிரத்து 943 பேர் மீது குற்றபத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 2386 பேர் குற்றம் நிரூபிக்கப்பட்டு நீதிமன்றத்தால் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
பலாத்கார குற்றம் தொடர்பாக 11 ஆயிரத்து 995 பேர் கைது செய்யப்பட்டனர். 4472 பேர் மீது குற்றபத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதில் 1466 பேர் குற்றவாளிகள் என கோர்ட்டில் நிருபிக்கப்பட்டுள்ளது. வரதட்சணை குற்றம் தொடர்பாக 1237 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் 249 பேர் மட்டுமே நீதிமன்றங்களால் தண்டிக்கப்பட்டுள்ளனர்’’ என்று தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment