Breaking News
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.
Wednesday, December 18, 2013
காங்கிரஸ் அல்லது பா.ஜனதா ஆதரவுடன் டெல்லியில் ஆட்சி அமைக்கலாமா?: மக்களிடம் கருத்து கேட்கிறார், கெஜ்ரிவால்
புதுடெல்லி, டிச.18-
டெல்லி சட்டசபை தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வந்த பாரதிய ஜனதா ஆட்சி அமைக்க மறுத்து விட்டது. அதைத் தொடர்ந்து 2-வது பெரிய கட்சியான ஆம்ஆத்மி கட்சிக்கு ஆட்சி அமைக்குமாறு துணைநிலை கவர்னர் நஜீப் ஜங் அழைப்பு விடுத்தார். ஆனால் அந்தக் கட்சி தலைவரான அரவிந்த் கெஜ்ரிவாலும், தனக்கு ஆட்சி அமைக்க பெரும்பான்மை பலம் இல்லை என்று கூறினார்.
இருப்பினும் அவர் 10 நாட்கள் அவகாசம் கேட்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அதிரடி திருப்பமாக, ஆம்ஆத்மி கட்சி ஆட்சி அமைக்க காங்கிரஸ் நிபந்தனையற்ற ஆதரவை அறிவித்தது. இருப்பினும் இதில் சந்தேகங்களை எழுப்பிய கெஜ்ரிவால், ‘நாங்கள் ஆட்சி அமைப்பதில் 18 முக்கிய பிரச்சினைகளில் உங்கள் நிலை என்ன?’ என்று கேட்டு, அவற்றைப் பட்டியலிட்டு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பாரதிய ஜனதா தலைவர் ராஜ்நாத் சிங் ஆகியோருக்கு கடிதம் எழுதினார். அவற்றுக்கு சாதகமான பதில்கள் வரவில்லை.
இதற்கிடையே இரு முக்கிய கட்சிகளும் ஆட்சி அமைக்க முன்வராதது தொடர்பாக ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு துணைநிலை கவர்னர் நஜீப் ஜங் அறிக்கை அளித்தார். அதில் அவர் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த பரிந்துரை செய்துள்ளார்.
டெல்லியில் ஆட்சி அமைக்க இன்றுடன் ‘கெடு’ முடிகிறது. எனவே இது தொடர்பாக எந்த நேரத்திலும் முடிவு எடுத்து அறிவிக்கப்படலாம் என எதிர்பார்ப்பு உள்ளது. இந்த நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லியில் நேற்று தனது கட்சியின் புதிய எம்.எல்.ஏ.க்கள், அரசியல் விவகாரக்குழு உறுப்பினர்களை கூட்டி அவசர ஆலோசனை நடத்தினார். அதைத் தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இன்றைய கூட்டத்தில் சில தலைவர்கள் ஆட்சி அமைக்கலாம், ஆட்சியை கவிழ்ப்பதற்கு முன்பாக 2 அல்லது 3 நல்ல காரியங்களை செய்து விடலாம் என்றனர். இன்னும் சிலரோ அதிகாரத்துக்கு வர வேண்டாம் என்றனர். எங்களது 18 நிபந்தனைகள் தொடர்பாக காங்கிரஸ் பதில் கடிதம் எழுதி உள்ளது. இதில் 16 நிபந்தனைகள் அரசு நிர்வாகம் தொடர்பானவை என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் பாரதிய ஜனதா பதில் கடிதம் எழுதவில்லை.
இன்னும் 6 மாதத்திற்கு பிறகு ஆட்சியை காங்கிரஸ் நிச்சயம் கவிழ்த்துவிடும் என்ற நிலையில், எப்படி அவர்களின் ஆதரவை பெற முடியும்? டெல்லியில் நாங்கள் ஆட்சி அமைப்பது குறித்து (காங்கிரஸ் - பாரதிய ஜனதா ஆதரவைப் பெறுவது பற்றி) மக்களின் கருத்துக்களை அறிய 25 லட்சம் கடிதங்கள் வினியோகிக்கப்படுகின்றன.
இது தொடர்பாக மக்களின் பதில்கள் வரும் ஞாயிற்றுக்கிழமை வரை பெறப்படும். பொதுமக்கள் தங்கள் பதிலை குறுந்தகவல் (எஸ்.எம்.எஸ்.) வழியாக 08806110335 என்ற எண்ணுக்கு தெரிவிக்கலாம். ‘பேஸ்புக்’ சமூக வலைத்தளத்திற்குள் போயும் பதிவு செய்யலாம். அதைத் தொடர்ந்து எங்கள் நிலைப்பாடு என்ன என்பதை 23-ந்தேதி பகிரங்கமாக அறிவிப்போம். துணை நிலை கவர்னருக்கும் தெரிவிப்போம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment