Breaking News
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.
Wednesday, December 11, 2013
மக்களிடம் தேமுதிக மீதான நம்பிக்கை போய்விட்டதாக நினைக்கிறீர்களா? பண்ருட்டி ராமச்சந்திரன் பேட்டி!
எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த பண்ருட்டி ராமச்சந்திரன், தேமுதிக அவைத்தலைவர் உட்பட கட்சியின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாகவும், அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாகவும் 10.12.2013 செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.
இதனையொட்டி சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
இது திடீர் முடிவு இல்லை. திட்டமிட்ட ஒரு முடிவுதான். பொதுவாக அனைத்து தொழில்களிலும் ஓய்வு என்பது உண்டு. ஆனால் அரசியல்வாதிகளுக்கு மட்டும் ஓய்வு வயது என்பது கிடையாது. எல்லாரும் என்ன நினைக்கிறார்கள் என்றால், அரசியலில் சாகும்வரை இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
என்னை பொறுத்தவரையில் நாம் எந்த பொறுப்பை எடுத்துக்கொண்டாலும் அந்த பொறுப்பை முழுமையாக நிறைவேற்றக்கூடிய சக்தி நமக்கு இருக்க வேண்டும். இல்லையென்றால் அதில் இருந்து பயனில்லை. ஒரு எம்எல்ஏவாக இருக்க வேண்டும் என்றால் ஓடி ஆடி வேலை செய்ய வேண்டும். எல்லாருக்கும் உதவியாக இருக்க வேண்டும். அதுபோல் கட்சியில் ஒரு பொறுப்பில் இருக்கிறோம் என்றால் சுறுசுறுப்பாக எல்லா இடத்திற்கும் போகணும் வரணும். எனக்கு வயது ஆகிட்டே போகுறதால எனக்கு முடியல. தனிப்பட்ட முறையில் உடல் மூலம் செய்யக்கூடிய வேலைகளை செய்ய முடியவில்லை.
வயது 77 ஆகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்புதான் மெடிக்கல் செக்கப் பண்ணினேன். டாக்டர் என்ன சொல்றார் என்றால் இனி ரொம்ப ஆக்டிவா இருக்க வேண்டாம். குறிப்பாக பாலிக்டிக்ஸ்ல ரொம்ப டென்ஷன் இருக்கும் என்று சொன்னார். இதையெல்லாம் கருத்தில்கொண்டு ஞாயிற்றுக்கிழமையே முடிவு பண்ணிட்டேன். ஆனால் அன்றைக்கு எலக்க்ஷன் ரிசல்ட்டா இருந்தது. திங்கள்கிழமை புது எம்எல்ஏ பதவிப்பிரமாணம் இருந்தது. அதனால்தான் இன்னைக்கு போயிட்டு வந்தேன்.
கேள்வி: தேமுதிக தலைவரிடம் ராஜினாமா செய்வதாக எப்போது சொன்னீர்கள்?
பதில்: அவரிடம் உடம்பு சரியில்ல என்பதை மட்டும்தான் சொன்னேன். ராஜினாமா செய்வதா சொன்னா அவர் எப்படி ஒத்துக்குவாரு. அப்புறம் அவங்க நெருக்கடி கொடுப்பாங்க ராஜினாமா பண்ணாதீங்கன்னு. அதுக்காக அவருக்கிட்ட சொல்லல.
கேள்வி: இதுக்கு முன்னால் நெருக்கடி ஏதும் இருந்ததா?
பதில்: அப்படி எதுவும் இல்லை.
கேள்வி: ஏற்கனவே தேமுதிக எம்எல்ஏக்கள் 7 பேர் விலகிவிட்டார்கள். தற்போது நீங்கள் விலகியதால் தேமுதிகவுக்கு பின்னடைவை ஏற்படுத்துமா?
பதில்: 7 பேர் இன்னும் விலகவில்லை. அதிருப்தி எம்எல்ஏக்களாக இருக்கிறார்கள். என்னை பொறுத்தவரையில் நான் விலகியதால் பெரும் பாதிப்பு இருப்பதாக நினைக்கவில்லை.
கேள்வி: உங்களுக்கும், விஜயகாந்த்துக்கும் கருத்து வேறுபாடு ஏதாவது இருந்ததா?
பதில்: கருத்து வேறுபாடு ஏதும் இல்லை.
கேள்வி: உடல்நிலையை காரணம் காட்டுகிறீர்கள். மூத்த வயதுடையவர்கள் இன்னும் அரசியலில் இருக்கிறார்கள். உடல்நிலையை காரணம் காட்டி அரசிய-ல் இருந்து வெளியேறினால் உங்களை தேர்ந்தெடுத்த மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாதா?
பதில்: மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தாது. அதனால்தான் நான் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தேன். அங்கு தேர்தல் வந்தால் மக்கள் யாரை வேண்டுமானாலும் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். அந்த வாய்ப்பு மக்களுக்கு உண்டு. என்னைவிட வயதானவர் யார்? கலைஞர்தான் இருக்கிறார். அவர் இந்தவயதிலும் அரசியலில் இருப்பது அனைவரும் ஆச்சரியப்பட வேண்டிய ஒன்றுதான்.
கேள்வி: தற்சமயம் தேமுதிகவின் செயல்பாடுகள் உங்களுக்கு திருப்தி அளிக்கிறதா?
பதில்: எனக்கு திருப்தி அளிக்கிறதா என்பது முக்கியமில்லை. மக்களுக்கு திருப்தி அளிக்கிறதா என்பதுதான் முக்கியம்.
கேள்வி: எம்.ஜி.ஆர். தலைமையிலும் செயல்பட்டிருக்கிறீர்கள். விஜயகாந்த் தலைமையிலும் செயல்பட்டிருக்கிறீர்கள். இரண்டுக்கும் என்ன வித்தியாசம்.
பதில்: அது எல்லாருக்கும் தெரிந்த விஷயம்தானே. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். என்பது வேற.
கேள்வி: தேமுதிக எம்எல்ஏக்களின் செயல்பாடு சட்டசபையில் எப்படி இருக்கிறது?
பதில்: அதையெல்லாம் நீங்களே நிறைய எழுதிகிட்டு இருக்கிறீர்களே. அதில் நான் வேற என்ன சொல்லணும். அவர்கள் இப்போதுôன் முதல் முறையாக சட்டசபைக்கு வந்திருக்கிறார்கள். போக போக அவர்கள் அனுபவத்தை பெற்று திறமையாக பணியாற்ற விரும்புகிறேன்.
கேள்வி: உங்களுடைய வாரிசுகளை அரசிய-ல் கொண்டுவர திட்டமிட்டுள்ளீர்களா?
பதில்: இல்லை
கேள்வி: உங்களது அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன?
பதில்: அடுத்தக்கட்ட நடவடிக்கை உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொண்டு மனதை நிம்மதியாக வைத்துக்கொள்வதுதான்.
கேள்வி: டெல்லி சட்டசபை தேர்தலில் தேமுதிக போட்டியிட்டது பற்றி உங்கள் கருத்து என்ன?
பதில்: அது நான் அவரிடம் வேண்டாம் என்று சொன்னேன். அவர் தலைவர் என்ற முறையில் முடிவு எடுத்தார்.
கேள்வி: எதனால் வேண்டாம் என்று சொன்னீர்கள்?
பதில்: ஓட்டு வராது என்பதால்தான்.
கேள்வி: இடைத்தேர்தலில் தேமுதிக போட்டியிடவில்லை. இதுபோன்ற நடவடிக்கைகள்தான் நீங்கள் கட்சியில் இருந்து விலக காரணமா?
பதில்: இல்லை. ஏற்காடு தொகுதியில் போட்டியிட வேண்டாம் என்று சொன்னேன். அதனை அவர் ஏற்றுக்கொண்டார். டெல்லியில் என்ன காரணத்தினாலோ போட்டி போட்டார்கள். அங்கு ஓட்டு கிடைக்காது என்றுதான் நான் சொன்னேன்.
கேள்வி: உங்கள் விலகலை மையமாக வைத்து என்ன பேசப்படுகிறது என்றால், அதிமுக - தேமுதிக உறவு முடிந்த பிறகு நீங்கள் இந்த முடிவு எடுத்ததாக கருத்து நிலவுகிறதே.
பதில்: அது அப்பவே முடிஞ்சுபோச்சே. சட்டசபையிலேயே.
கேள்வி: அதிமுகவில் இருந்து ஒருவேளை அழைப்பு வந்தால் என்ன முடிவு எடுப்பீர்கள்?
பதில்: ஏங்க நான்தான் அரசியலைவிட்டே ஓய்வு பெறுவதா சொல்றேன். நீங்க ஏதாவது ஒரு கட்சில சேர்த்துவிட நினைக்கிறீங்க.
கேள்வி: அண்ணா காலம் முதல் விஜயகாந்த் காலம் வரை அரசியலில் பணிபுரிந்துள்ளீர்கள். உங்களை கவர்ந்த தலைவர் யார்?
பதில்: புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.தான் எனக்கு எல்லாம். அதில் எந்தவித சந்தேகமும் கிடையாது. அவர் இல்லை என்றால் நான் இல்லை.
கேள்வி: தேமுதிகவில் இருந்து விலகிவிட்டீர்கள். விஜயகாந்த்துக்கு நீங்கள் சொல்லும் அறிவுரை என்ன?
பதில்: அறிவுரை சொல்லும் அளவுக்கு நான் பெரிய ஆள் இல்லை. அவருக்கே எல்லாம் தெரியும்.
கேள்வி: இந்த முடிவு மறுபரிசீலனைக்கு உரியதா?
பதில்: இல்லை. அதுதான் ராஜினாமா செய்துவிட்டேனே.
கேள்வி: தேமுதிக குடும்ப கட்சியாக ஆகிவிட்டதா?
பதில்: எல்லா கட்சியுமே அப்படிதான் ஆகிவிட்டது. குடும்ப கட்சிகள்தான் இந்தியாவில்தான் அதிகம் இருக்கிறது.
கேள்வி: விஜயகாந்த்தை சந்திக்க உங்களுக்கு இடையூறு இருந்ததா?
பதில்: இல்லை. நான் எப்போது வேண்டுமானாலும் அவரை சந்தித்துப்பேசுவேன். எந்தவிதமான தடைகளும் இருந்ததில்லை.
கேள்வி: தேமுதிக எம்எல்ஏக்களுக்கும், தொண்டர்களுக்கும் நீங்கள் சொல்ல விரும்பும் கருத்து என்ன?
பதில்: அதில் இருந்து வந்துவிட்டேன். இனி கருத்து சொல்ல என்ன இருக்கு.
கேள்வி: தேமுதிக ஆரம்பிக்கும்போது இது ஒரு மாற்று அணியாகவும், மாற்று கொள்கையாகவும் செயல்படுவோம் என்று விஜயகாந்த் சொன்னார். அந்த வார்த்தைக்கு உண்மையாக அந்த கட்சி இருந்ததா? மற்ற கட்சிகள் போன்று மாறிவிட்டதா?
பதில்: ஆரம்பத்தில் நன்றாகத்தான் இருந்தது. எங்கு போனாலும் மக்கள் நம்பினார்கள். எப்படியும் ஒரு மாற்று ஏற்பாடாக வரும் என்று. நடைமுறையில் அந்த கட்சியினுடைய செயல்பாட்டில் அந்த நம்பிக்கை குறைந்துவிட்டது.
கேள்வி: மக்களிடம் தேமுதிக மீதான நம்பிக்கை போய்விட்டதாக நினைக்கிறீர்களா?
பதில்: குறைந்துவிட்டது என்று நினைக்கிறேன்.
கேள்வி: அதை மீட்க முடியும் என்று நினைக்கிறீர்களா?
பதில்: அதை அதன் தலைமை தான் மீட்க வேண்டும்.
கேள்வி: அதிருப்தி எம்எல்ஏக்கள் 7 பேரும், உங்களுக்கு தேமுதிக தலைமை மதிக்கவில்லை. உரிய மரியாதை அளிக்கவில்லை என்பதால்தான் விலகல் முடிவை எடுத்ததாக சொல்கிறார்களே?
பதில்: அதை நீங்கள் அவர்களிடம்தான் கேட்கவேண்டும். என்னை பொறுத்தவரை நான் எப்போது வேண்டுமானாலும் தலைமையை சந்திப்பேன். என்னுடைய கருத்தை சொல்வேன். சிலவற்றை ஏற்பார். சிலவற்றை ஏற்கமாட்டார். அது தலைவருக்கு உரிய உரிமை. அதை நாம் குறைசொல்ல முடியாது. என்னை பொறுத்தவரையில் தனிப்பட்ட முறையில் எந்த ஒரு அவமரியாதையும் கிடையாது.
கேள்வி: உங்களைப்போல வேறு எந்த தேமுதிக உறுப்பினரும் இந்த முடிவை எடுப்பார்களா?
பதில்: அது பற்றி எனக்கு தெரியாது.
இவ்வாறு பேட்டி அளித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment