Breaking News

JOINING THE COMMUNITIES--------------------->Contect:as soon as
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016

RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.

Tuesday, December 10, 2013

ஆந்திராவுக்கு மீண்டும் பஸ்கள் இயக்கம்

ஆந்திரத்தில் பதற்றம் தணிந்ததைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை முதல் தமிழகத்திலிருந்து பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தெலங்கானா தனி மாநிலம் பிரிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆந்திரத்தில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வந்தன. இதற்கிடையே, தெலங்கானா புதிய மாநிலம் அமைப்பது தொடர்பான வரைவு மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை கடந்த வியாழக்கிழமை (டிசம்பர் 5) ஒப்புதல் அளித்தது. அதனைத் தொடர்ந்து, எதிர்ப்பாளர்கள் ஆந்திரத்தில் மீண்டும் போராட்டத்தை தீவிரப்படுத்தினர். அங்கு பதற்றம் நிலவியதால், தமிழகத்திலிருந்து ஆந்திரத்தின் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படும் 150 பஸ்களும் வெள்ளிக்கிழமை முதல் நிறுத்தப்பட்டன. கடந்த சனிக்கிழமை மதியம் முதல் அங்கு பதற்றம் தணிந்துள்ளது. எனவே, அன்று மாலை முதல் ஆந்திரத்தில் ஒருசில பகுதிகளுக்கு மட்டும் பஸ் போக்குவரத்து தொடங்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை முதல் வழக்கமான பஸ் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டது என தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக விழுப்புரம் கோட்டத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment