Breaking News

JOINING THE COMMUNITIES--------------------->Contect:as soon as
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016

RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.

Thursday, December 5, 2013

நன்கொடை ரசீது மூலம் தேமுதிக கட்சி வளர்ச்சிக்காக நிதிவசூல் மும்முரம்: ரூ.50 லட்சம் திரட்ட உத்தரவு

அடுத்த ஆண்டு, மே மாதத்தில் பாராளுமன்ற தேர்தல் வருகிறது. இந்த தேர்தலை சந்திக்க அகில இந்தியாவிலும் உள்ள கட்சிகள் தயாராகிக்கொண்டிருக்கின்றன. தமிழ்நாட்டிலும் அனைத்து அரசியல் கட்சிகளிடையேயும் ஒரு வேகம் தென்படுகிறது. இந்த நிலையில், விஜயகாந்தை நிறுவனர் தலைவராகக்கொண்ட தே.மு.தி.க. ஏற்காடு சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை. ஆனால், டெல்லியில் உள்ள சட்டசபை தேர்தலில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் தொகுதிகள் உள்பட புதுடெல்லி, ராஜேந்திர நகர், ஜங்புரா, மாள்வியா நகர், பாலம், ஜனக்புரி, ராமகிருஷ்ணபுரம் போன்ற 11 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. விஜயகாந்தும் 5 நாட்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அவருடைய மனைவி பிரேமலதாவும் தீவிரமாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். டெல்லியில், அவரிடம், “பாராளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டு வைக்கப்போகிறீர்கள்?” என்று நிருபர்கள் கேட்டபோது, தமிழ்நாட்டுக்கு யார் நல்லது செய்தாலும் அவர்களுடன் கூட்டு வைத்துக்கொள்வோம். என்னுடைய தலைமையை ஏற்க யார் வந்தாலும் அந்த கட்சியுடன் நாங்கள் கூட்டு வைத்துக்கொள்வோம் என்று குறிப்பிட்டது, அரசியலில், பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாராளுமன்ற தேர்தலை சந்திப்பதற்கு தே.மு.தி.க. மிகவும் மும்முரமாக உள்ளது. இதையொட்டி, கட்சி வளர்ச்சி நிதியாக நிதி வசூலில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளது. தே.மு.தி.க.வுக்கு தமிழ்நாட்டில் 59 மாவட்ட செயலாளர்கள் இருக்கிறார்கள். இவர்கள் அனைவருக்கும் தலா 50 லட்சம் ரூபாய் கட்சி வளர்ச்சி நிதி திரட்ட வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்து உத்தரவிடப்பட்டுள்ளது. இதை நிறைவேற்றும் வகையில், அந்தந்த மாவட்ட பகுதியில் உள்ள மாவட்ட செயலாளர்கள் ரூ.5000, 10 ஆயிரம் ரூபாய், 25 ஆயிரம் ரூபாய், 50 ஆயிரம் ரூபாய் என்று, ரசீது புத்தகங்களை வைத்துக்கொண்டு நிதி திரட்டி வருகிறார்கள். அதிகபட்சமான ஒரு லட்சம் ரூபாய் ரசீதைவைத்துத்தான் முதலில், தங்கள் கட்சிக்காக நன்கொடை கேட்டு வருகிறார்கள். நன்கொடை கேட்கும்போது, காசோலையாகவும், கேட்பு வரைவோலையாகவும் (டி.டி.) தரவேண்டும் என்று கோருகிறார்கள். ஒவ்வொரு ரசீதின் பின்புறத்திலும் “தே.மு.தி.க.வின் வளர்ச்சி தமிழகத்தின் எழுச்சி” என்று மேற்புறத்தில் குறிப்பிடப்படப்பட்டுள்ளது. அதற்கு கீழே, அன்பு, அறம், ஆற்றல், இயன்றதைச் செய்வோம்! இல்லாதவர்க்கே! லஞ்சம், ஊழல், வறுமையை ஒழிப்போம்! உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம் அனைவருக்கும் கொடுப்போம்! தமிழர் நலன் காத்திடுவோம்! தமிழக உரிமையை நிலைநாட்டிடுவோம்! படித்தவர்களுக்கும், படிக்காதவர்களுக்கும் வேலைவாய்ப்பை உருவாக்குவோம்! விவசாயிகளுக்கு நல்ல விதை, தரமான உரம், நல்ல விளைச்சலோடு, நல்ல விலையும் கிடைக்க செய்வோம்! தமிழன் என்று சொல்லடா! தலைநிமிர்ந்து நில்லடா! அன்னை மொழி காப்போம்! அனைத்து மொழியும் கற்போம்! சாதி, மத, பேதமற்ற சமத்துவ சமுதாயம் அமைப்போம்! சிறந்த கல்வி, தரமான மருத்துவம் அனைவருக்கும் கிடைக்கச்செய்வோம்! நேர்மையான நீதி, தூய்மையான நிர்வாகம் மற்றும் துரிதமான செயல்பாடு அமைய செய்வோம்! ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கு சமஉரிமை, சமபங்கு, சமவாய்ப்பு பெற்றிட வழிசெய்வோம்! உழைக்கும் தொழிலாளர்களின் நலன் காப்போம், அவர்களின் உரிமைக்காக குரல் கொடுப்போம்!” என்று அச்சிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment