Breaking News

JOINING THE COMMUNITIES--------------------->Contect:as soon as
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016

RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.

Tuesday, November 12, 2013

பிரித்தானியப் பிரதமரின் ஊடகவியலாளர் குழுவில் கெலும் மக்ரே - சிறீலங்காவுக்கு அதிர்ச்சி

அமெரிக்காவுக்கு ஸ்நொவ்டன் போன்று சிறிலங்காவிற்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்கின்ற கெலும் மக்ரே நேற்று திங்கட்கிழமை சிறிலங்காவிற்கே வந்தடைந்தார். இவரின் வருகையானது சிறிலங்காவை பெரும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. அதற்கு மேலாக சிறிலங்காவிலுள்ள கடும்போக்கு சிங்களவர்களுக்கு கெலும் மக்ரேயின் வருகையானது புண்ணில் புளியைக் கரைத்தால் போல ஆகிவிட்டது. ஆனாலும் உலகின் சக்திமிக்க ஒரு தலைவரின் ஊடகவியலாளர் குழுவில் அவர் இடம்பெற்றிருப்பதால் அவரை நெருங்க முடியாத நிலை சிறிலங்காவின் இனவெறியர்களுக்கு ஏற்பட்டிருக்கின்றது. எவரை பரம எதிரியாகவும் விரோதியாகவும் யோசித்தார்களோ, எவரைக் கண்டால் கொன்று தின்போம் என்று கொக்கரித்தார்களோ, எவருக்கு எதிராக நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தினார்களோ அவரே அருகில் வந்து நிற்கின்ற போதிலும் அவரை தொட்டுக்கூடப் பார்க்க முடியாத நிலை சிங்களவர்களுக்கு ஏற்பட்டிருக்கின்றது. ஆயினும் எட்ட நின்று ஒரு ஆர்ப்பாட்டத்தை நடத்தி முடித்திருக்கின்றனர். ஆம், சிறிலங்கா அரசாங்கத்தால் தேடப்படுவர்களின் பட்டியலில் முதல்நிலையில் இருந்த சனல் 4 ஊடக நிறுவனத்தின் முக்கிய ஊடகவியலாளர் கெலும் மக்ரே நேற்று திங்கட்கிழமை சிறீலங்காவுக்கு வந்திறங்கியுள்ளார். அமெரிக்காவின் முக்கிய இரகசியங்களை அம்பலமாக்கியதால் அந்த நாட்டினால் தேடப்படும் குற்றவாளியாக மாறியுள்ள ஸ்நோவ்டன் போன்று சிறிலங்காவின் முக்கிய போர்க்குற்ற ஆதாரங்களை வெளியிட்டு சிறிலங்காவை சர்வதேச ரீதியாகப் பெரும் நெருக்கடிக்குத் தள்ளியுள்ளவர் கெலும் மக்ரே. வன்னியில் சாட்சியமற்ற யுத்தம் ஒன்றை நடத்தியதன் மூலம் அங்கு இடம்பெற்ற தமிழின அழிவை மூடி மறைக்க முற்பட்ட சிறிலங்காவிற்கு யுத்தம் முடிந்து சில மாதங்களிலேயே பேரிடியாக வந்து விழுந்தவர்தான் கெலும் மக்ரே. மிகச் சிறந்த துணிச்சல் மிக்க ஊடகவியலாளரான இவர் மனிதாபிமானம் மிக்கவர். தமிழ் மக்களுக்கோ புலிகளுக்கோ இவர் உதவி செய்ய முற்படவில்லை. புலிகளுக்காக இவர் வக்காளத்து வாங்கவில்லை. ஆனால், மனிதர்கள் மனிதாபிமானமின்றிக் கொல்லப்பட்டமைக்கு எதிராக இவர் குரல் கொடுத்தார். உலகில் எந்த நாட்டிலும் உள்ள ஊடகவியலாளன் எப்படிப் பணியாற்றுவானோ அதே ஊடகப் பணியைத்தான் கெலும் மக்ரே ஆற்றியிருக்கின்றார். பிரித்தானியப் பிரதமரின் ஊடகவியலாளர் குழுவில் கெலும் மக்ரே - சிறீலங்காவுக்கு அதிர்ச்சி நவ 12, 2013 அமெரிக்காவுக்கு ஸ்நொவ்டன் போன்று சிறிலங்காவிற்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்கின்ற கெலும் மக்ரே நேற்று திங்கட்கிழமை சிறிலங்காவிற்கே வந்தடைந்தார். இவரின் வருகையானது சிறிலங்காவை பெரும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. அதற்கு மேலாக சிறிலங்காவிலுள்ள கடும்போக்கு சிங்களவர்களுக்கு கெலும் மக்ரேயின் வருகையானது புண்ணில் புளியைக் கரைத்தால் போல ஆகிவிட்டது. ஆனாலும் உலகின் சக்திமிக்க ஒரு தலைவரின் ஊடகவியலாளர் குழுவில் அவர் இடம்பெற்றிருப்பதால் அவரை நெருங்க முடியாத நிலை சிறிலங்காவின் இனவெறியர்களுக்கு ஏற்பட்டிருக்கின்றது. எவரை பரம எதிரியாகவும் விரோதியாகவும் யோசித்தார்களோ, எவரைக் கண்டால் கொன்று தின்போம் என்று கொக்கரித்தார்களோ, எவருக்கு எதிராக நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தினார்களோ அவரே அருகில் வந்து நிற்கின்ற போதிலும் அவரை தொட்டுக்கூடப் பார்க்க முடியாத நிலை சிங்களவர்களுக்கு ஏற்பட்டிருக்கின்றது. ஆயினும் எட்ட நின்று ஒரு ஆர்ப்பாட்டத்தை நடத்தி முடித்திருக்கின்றனர். ஆம், சிறிலங்கா அரசாங்கத்தால் தேடப்படுவர்களின் பட்டியலில் முதல்நிலையில் இருந்த சனல் 4 ஊடக நிறுவனத்தின் முக்கிய ஊடகவியலாளர் கெலும் மக்ரே நேற்று திங்கட்கிழமை சிறீலங்காவுக்கு வந்திறங்கியுள்ளார். அமெரிக்காவின் முக்கிய இரகசியங்களை அம்பலமாக்கியதால் அந்த நாட்டினால் தேடப்படும் குற்றவாளியாக மாறியுள்ள ஸ்நோவ்டன் போன்று சிறிலங்காவின் முக்கிய போர்க்குற்ற ஆதாரங்களை வெளியிட்டு சிறிலங்காவை சர்வதேச ரீதியாகப் பெரும் நெருக்கடிக்குத் தள்ளியுள்ளவர் கெலும் மக்ரே. வன்னியில் சாட்சியமற்ற யுத்தம் ஒன்றை நடத்தியதன் மூலம் அங்கு இடம்பெற்ற தமிழின அழிவை மூடி மறைக்க முற்பட்ட சிறிலங்காவிற்கு யுத்தம் முடிந்து சில மாதங்களிலேயே பேரிடியாக வந்து விழுந்தவர்தான் கெலும் மக்ரே. மிகச் சிறந்த துணிச்சல் மிக்க ஊடகவியலாளரான இவர் மனிதாபிமானம் மிக்கவர். தமிழ் மக்களுக்கோ புலிகளுக்கோ இவர் உதவி செய்ய முற்படவில்லை. புலிகளுக்காக இவர் வக்காளத்து வாங்கவில்லை. ஆனால், மனிதர்கள் மனிதாபிமானமின்றிக் கொல்லப்பட்டமைக்கு எதிராக இவர் குரல் கொடுத்தார். உலகில் எந்த நாட்டிலும் உள்ள ஊடகவியலாளன் எப்படிப் பணியாற்றுவானோ அதே ஊடகப் பணியைத்தான் கெலும் மக்ரே ஆற்றியிருக்கின்றார். ஆனால், அவர் மிக வித்தியாசமான பணியை ஆற்றியிருக்கின்றார். சாட்சியமற்ற யுத்தத்தின் சாட்சிகளை மிகவும் கஸ்டங்களுக்கு மத்தியில் வெளியே கொண்டு வந்திருக்கின்றார். இவரது ஊடகப் பணி மிகவும் வித்தியாசமானது. இவர் தனது தரவுகளைப் பெறுவதற்காக மிகுந்த சிரமங்களை எதிர்நோக்கியிருக்கின்றார். பல மில்லியன் கணக்கான ரூபாய்களைச் செலவு செய்து தனது செய்திக்கான மூலங்களைப் பெற்றுக்கொண்டிருக்கின்றார். இதனால் உலகில் இன்று பெயர் குறிப்பிட்டுச் சொல்லக்கூடடிய ஊடகவிலாளர்களின் வரிசையில் இவரின் பெயரும் இடம்பெற்றுள்ளது.கெலும் மக்ரேயை நாட்டுக்குள் வர சிறிலங்கா அரசாங்கம் அனுமதி வழங்கியிருக்கவில்லை. இந்தியாவிற்கு செல்தற்கே அனுமதி மறுக்கப்பட்ட ஊடகவியலாளர் கெலும் மக்ரேயை தாங்கள் தமது நாட்டுக்கு வர அனுமதித்திருப்பதாக சிறிலங்கா அரசாங்கம் முதலில் பிதற்றியது. ஆனால் மக்ரே எவ்வாறு வருகின்றார் என்பது அப்போது மக்களுக்குப் புரிந்திருக்கிவில்லை. ஆனால், அவர் எப்படி வருகின்றார் என்பது இன்று பொதுமக்கள் அனைவருக்கும் நன்றாகப் புரிந்துவிட்டது. கெலும் மக்ரே தனிப்பட்ட ரீதியில் சிறிலங்காவிற்கு வர விரும்பியிருந்தால் முடிவு வேறு விதமாக அமைந்திருக்கும் என்று இன்று சுட்டிக்காட்டியுள்ள அரசாங்கம், அவர் பிரித்தானியப் பிரதமரின் ஊடகவியலாளர் குழுவில் இடம்பெற்றதாலேயே அதனை இராஜதந்திர ரீதியில் அணுகவேண்டியிருந்ததாக இன்று உண்மையை அறிவித்துள்ளது. கெலும் மக்ரே கடந்த காலங்களில் தனது சனல் 4 தொலைக்காட்சி மூலமாக சிறிலங்காவிற்கு எதிரான மிக மோசமான ஆவணப்படங்களைத் தயாரித்து வெளியிட்டிருக்கின்றார். மிக முக்கியமான சந்தர்ப்பங்களில் சிறிலங்கா அரசுக்கு அபகீர்த்தியையும் நெருக்கடியையும் தோற்றுவிப்பதில் முனைப்புடன் செயற்பட்டிருக்கின்றார். இன்றும் கூட அவர் அந்த நிலைப்பாட்டிலிருந்து விடுபடவில்லை என்பதை அரசு நன்கு புரிந்துள்ளது என்றும் கெஹலிய ரம்புக்வெல மேலும் தெரிவித்துள்ளார்.கெலும் மக்ரேயை விடுதலைப் புலிகளின், புலம்பெயர் தமிழ் மக்களின் கூலிப்படையென்றே வெளிப்படையாக நாம் பார்க்கின்றோம் என்றும் ரம்புக்வெல தெரிவித்திருக்கின்றார். தற்போதை சிறிலங்கா விஜயத்தைக் கூட அவர் புலிகளுக்கும் புலம்பெயர் தமிழ் மக்களுக்கும் சார்பாக பயன்படுத்தக் கூடும் என்ற தமது அச்சத்தையும் ரம்புக்வெல வெளியிட்டுள்ளார். ஆயினும் கெலும் மக்ரே சிறிலங்காவின் எந்த இடத்ததிற்கு வேண்டுமானாலும் செல்லலாம் என்றும் பிரித்தானியப் பிரதமர் யாழ்ப்பாணம் செல்லும் போது அவர் யாழ்ப்பாணத்திற்கும் செல்ல முடியும் என்றும் அரசாங்கத்தின் இயலாமைத் தனத்தை ரம்புக்வெல வெளிக்காட்டியுள்ளார்.. இதேவேளை, கெலும் மக்ரே நேற்று சிறிலங்காவிற்கு வந்திறங்கி உடனேயே அவருக்கு எதிரான ஆர்ப்பாட்டமொன்று கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் இடம்பெற்றுள்ளது. அரசாங்கமே இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னின்று நடத்தியதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கெலும் மக்ரேயும் அவரது குழுவினரும் விமான நிலையத்திற்கு வந்திறங்கியவுடன் அவருக்கு எதிராக பல கோசங்களை எழுப்பியவாறும் பதாகைகளைத் தாங்கியவாறும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோசங்களை எழுப்பினர். கெலும் மக்ரே நீ நாட்டை விட்டு வெளியேறு….., நீ புலிகளிடம் பணம் வாங்கிவிட்டா செயற்படுகின்றாய்….. நீ ஒரு துரோகி…. நீ எங்கள் நாட்டைக் கெடுத்தவன் என்று பலவாறான கோசங்களை எழுப்பியவாறும் பதாகைகளை ஏந்தியவாறும் அவருக்கு எதிராக அறுபது பேர் வரையானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அந்த இடத்தில் அவரைச் சூழ்ந்துகொண்ட ஊடகவியலாளர்கள் அவரிடம் பல கேள்விகளைத் தொடுத்தனர். ஊடகவியலாளர்களுக்கு மிகத் தெளிவாகப் பதிலளித்த கெலும் மக்ரே, நான் புலிகளிடம் பணம் வாங்கவில்லை. அவர்களின் ஆதரவாளனும் அல்ல. தொலைக்காட்சித் தயாரிப்பாளனாகவே செயற்படுகின்றேன். நான் விரும்புகின்ற எந்த நிகழ்ச்சியையும் தயாரிக்க எனக்கு உரிமை இருக்கிறது. அதற்கேற்பவே செயற்படுகின்றேன் என்றார். மேலும், இப்போது நான் பொதுநலவாய மாநாட்டுக்காகவே சிறிலங்காவிற்கு வந்திருக்கின்றேன் என்றார். எது எப்படியிருக்கின்ற போதிலும் சிறிலங்கா கெலும் மக்ரே என்ற தனி நபரிடம் தோற்றுவிட்டது. இனிமேல் தான் வெற்றியாளன் என்று நிரூபிப்பதற்கு சிறிலங்காவிடம் எதுவுமில்லை. வீழ்ந்தாலும் மீசையில் மண் படவில்லை என்று கூறுவதில் சிறிலங்காவிற்கு நிகர் சிறிலங்காவே. இன்று மட்டுமல்ல. தொன்று தொட்டு சிறிலங்காவின் பண்பாடு இதுவே.

No comments:

Post a Comment