2016ஆம் ஆண்டு இறுதிக்குள், உலக அளவில் பயன்படுத்தப்பட்டு வரும் கைப்பேசிகளில், 50 விழுக்காட்டு அளவு ஸ்மார்ட் கைப்பேசிகள் இடம் பிடிக்கும் என்று ஜிஎஸ்எம்ஏ நிறுவனம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.
இந்நிறுவனம் வெளியிட்ட விபரங்களின்படி, அதிக அளவிலான ஸ்மார்ட் கைப்பேசிகளைப் பயன்படுத்தும் நாடுகளில் சீனா முதலிடத்தில் உள்ளது. 2015ஆம் ஆண்டு புள்ளி விபரங்களின்படி 89 கோடி பேர் இத்தகைய கைப்பேசிகளை பயன்படுத்தி வருகின்றனர்.
சீனாவைத் தொடர்ந்து, அதிக ஸ்மார்ட் ரக கைப்பேசிகளை பயன்படுத்துவதில் இந்தியர்கள் முன்னணியில் உள்ளனர்.
No comments:
Post a Comment