Breaking News
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.

Tuesday, February 17, 2015
நானும் பொறுமையாகக் காத்திருந்து பார்த்தேன்
நானும் பொறுமையாகக் காத்திருந்து பார்த்தேன். சுகுமார்ஜி இந்த இழையை ஆரம்பிப்பார் என்று. ஆனால் இன்னும் காணோம். இருந்தால் என்ன ? தொடங்கி வைத்து நாம் பலரும் சேர்ந்து பேசுவோம்.
-----------------------------------------------------------------------------
வேளாண் மரபுகள் என்றால் பல வித மரபு சார்ந்த வேளாண் முறைகள். பல நாடுகளில் கைக்கொள்ளப் படுபவை. நம் நாட்டிலேயே இருந்து மெல்ல மெல்ல காணாமல் போனவை. பழம் நூல்களில் இருந்து நாம் கண்டு கொள்ளாமல் இருப்பவை. பகட்டும், மினுக்கும் உள்ள சினிமா கவர்ச்சியில் நம் சிந்தையைப் பறி கொடுத்து நமது வேர்கள் பதிந்து இருக்கும் வேளாண் உலகத்தை நாம் திரும்பிக் கூட பார்க்காத காரணத்தால் அங்கு நடக்கும் எத்தனையோ மாற்றங்கள், சாதனைகள், மீள் மரபுகள், நசிக்கும் பல வழிவழி நன்மைகள் --- இப்படி எத்தனையோ இருக்கின்றன வேளாண் மரபுகளைப் பற்றி நாம் பேச முடிவெடுத்தால்.
-----------------------------------------------------------------------------
இது வரையில் இலக்கிய நூல்களை மட்டுமே பார்ப்பேன் என்று அட்ம் பிடிப்பவர்கள் அப்படியே அடம் பிடிக்கட்டும். தவறில்லை. ஆனால் என்ன. அவ்வப்பொழுது வேளாண் கருத்துகள் காவியங்களிலும் இலக்கிய நூல்களிலும் எப்படி கையாளப் படுகின்றன என்று சொல்லட்டுமே.
-----------------------------------------------------------------------------
ஒரு சமயம் தொடர்ந்து வானொலியில் வேளாண்மைச் செய்திகள் கலந்துரையாடல்களாகக் கேட்டுக்கொண்டிருந்தேன். அப்பொழுதுதான் தெரிந்தது எவ்வளவு பயனுள்ள ஒரு ஒலிபரப்பை, ஒரு கல்வியை நாம் பரபரப்பூட்டும் மற்ற விஷயங்களில் கவனத்தைச் செலுத்தி இழந்து வந்திருக்கிறோம் என்று. இப்பவும் அந்தக் குறிப்பெடுத்த நோட் புக் இருக்கிறது. (உனக்கு வேற வேலை இல்லையா? என்கிறீர்களா)
-----------------------------------------------------------------------------
சமீபத்தில் என் நண்பர் திரு குருராஜ் அவர்களிடம் பேசிக்கொண்டிருந்த பொழுது, நல்லதொரு தொழில் முனைவோரான அவர் கூறினார், ‘சார்! இந்த ரசாயன உரங்கள் போட்டு நம் உணவுகளே பாழாகி விட்டன. இயற்கை உரங்கள்தான் சரி. இந்தப் பாருங்க. பசுமை விகடன் என்ற இதழில் 10--10--2009ல் முதல்வருக்கு நம்மாழ்வார் கடிதம் என்ற இந்தக் கட்டுரையைப் படிங்க’ என்று கொடுத்தார். சங்கத் தமிழே பங்கம் தவிர் - என்ற அந்தக் கட்டுரை நல்லதொரு கட்டுரை.
-----------------------------------------------------------------------------
அதில் சிந்திக்க வைக்கும் ஒரு கருத்து -- இப்பொழுது தமிழ் நாட்டில் சராசரி நெல் விளைச்சல் ஏக்கருக்கு 1400 கிலோவாம். இத்தனைக்கும் ரசாயன உரங்கள் யூரியா, டிஏபி பொட்டாஷ் எண்டோசல்பான் எல்லாம் போட்டு வதக்கி வர விளைச்சல். கரிகால் சோழன் காலத்தில் இந்த ரசாபாசம் எல்லாம் கிடையாது. இயற்கை உரங்களே முழுக்க முழுக்க. அனால் விளைச்சல் எவ்வளவு தெரியுமா? ஏக்கருக்கு 4883 கிலோ.
-----------------------------------------------------------------------------
எதை வைத்துச் சொல்கிறார் திரு நம்மாழ்வார்? முடத்தாமக் கண்ணியார் பாடிய பொருநராற்றுப்படையில் வரும் வரிகள். ‘சாலி நெல்லின் சிறை கொள் வேலி ஆயிரம் விளை உட்டாக காவிரி புரக்கும் நாடு கிழவோனே’ அதாவது ஒரு ஹெக்டேருக்கு 12,800 கிலோ நெல். ஏக்கருக்கு 4,886 கிலோ.
-----------------------------------------------------------------------------
என்ன அப்பொழுது மட்டும் உழவில் பூச்சி கிருமி பிரச்சனைகள் இல்லையா? இருந்தது. அதனை சமாளிக்க இயற்கை மருந்துகள், ஜீவாம்ருதக் கரைசல், முட்டைக்கரைசல், பஞ்சகவ்யா போன்றவை கையாளப்பட்டன.
-----------------------------------------------------------------------------
இயற்கைச் சீற்றங்கள், உரங்கள் என்பனவற்றால் ஏற்படும் பிரச்சனை உப்பு நிலம் எனப்படும் களர் நிலம். பொதுவாகக் களர் நிலத்தை நல்ல நிலமாக மாற்றத் தக்கைப் பூண்டுகள் பயன்படும் என்கிறார் ‘தமிழ்நாடு இயற்கை விவசாய இயக்கத்தின்’ இயக்குநரான ரேவதி அவகள்.
-----------------------------------------------------------------------------
நன்கு விளைந்த வயலோ காலங் கெட்ட காலத்தில் பெய்யும் மழை, அதைவிட அன்றாடம் மேய வரும் விலங்குகள் போன்ற ஆபத்துக்களை எதிர்நோக்கிய படியே நிற்கும். விலங்குகளைத் தடுக்க அழுகின முட்டை, பொறிச்ச முட்டை ஓடுகள் ஆகியவை கொண்ட கரைசலை வேலியோரமாகத் தெளித்து அதன் மூலம் விலங்குகளை விலகச் செய்யலாம் என்கிறார் பேராசிரியர் டாக்டர் டி நரஹரி. மின்வேலியெல்லாம் போட்டு துரத்துவதைவிட இது எவ்வளவோ மேல் ஆச்சே! உரத்துக்கு உரமும் ஆச்சு.
-----------------------------------------------------------------------------
நமது சொல்லேர் உழவரான திருவள்ளுவனார் உழவு என்பதைப் பற்றிக் கூறியிருக்கும் கருத்துகள்தாம் எவ்வளவு தற்காலப் பொருத்தம் உடையன!
-----------------------------------------------------------------------------
1037) தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்து எருவும்
வேண்டாது சாலப் படும்.
-----------------------------------------------------------------------------
பரிமேலழகர் உரை --
-----------------------------------------------------------------------------
தொடிப்புழுதி கஃசா உணக்கின் -- ஒரு நிலத்தினை உழுதவன் ஒருபலப் புழுதி கஃசாம் வண்ணம் அதனைக் காய விடுவானாயின்;
ப்டித்து எருவும் வேண்டாது சாலப்படும் -- அதன்கட் செய்த பயிர் ஒரு பிடியின் கண் அடங்கிய எருவுமிட வேண்டாமற் பணைத்து விளையும். --
-----------------------------------------------------------------------------
(கஃசு -- பழங்கால அளவை, கால் பலம்)
-----------------------------------------------------------------------------
1038) ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்
நீரினும் நன்றதன் காப்பு.
-----------------------------------------------------------------------------
பரிமேலழகர் --- ஏரினும் எரு இடுதல் நன்று --- அப்பயிர்க்கு அவ்வுழுதலினும் எருப்பெய்தல் நன்று; கட்டபின் அதன் காப்பு நீரினும் நன்று --- இவ்விரண்டும் செய்து களைகட்டால் அதனைக் காத்தல் அதற்கு நீர்கால் யாத்தலினும் நன்று.
-----------------------------------------------------------------------------
காத்தல் -- பட்டி முதலியன மேயாமல் காத்தல்.
-----------------------------------------------------------------------------
(உழவின் அடிப்படையான ஐந்து செயல்கள் --- உழுதல், எருப்பெய்தல், களைகட்டல், நீர்கால் யாத்தல், காத்தல் என்பன)
-----------------------------------------------------------------------------
பட்டி மேய்தல் என்றவுடன் அக்காவின் வரிகள் ஞாபகத்துக்கு வரவேண்டுமே! நாச்சியார் திருமொழி 14. 1, ‘பட்டி மேய்ந்தோர் காரேறு பலதேவற்கு ஓர் கீழ்க்கன்றாய் இட்டீறிட்டு விளையாடி இங்கே போதக் கண்டீரே!’
-----------------------------------------------------------------------------
ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment