Breaking News

JOINING THE COMMUNITIES--------------------->Contect:as soon as
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016

RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.

Thursday, March 13, 2014

பெண்கள் சிறுவர்கள் மீதான பாலியல் துஸ் பிரயோகங்களுக்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டம்:-

வடமாகாணத்தில் அண்மை காலமாக தொடர்ச்சியாக நடைபெற்று வரும் பெண்கள் சிறுவர்கள் மீதான பாலியல் துஸ்பிரயோகங்களுக்கு எதிராக நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு நெல்லியடி நகர பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டமும் கவனயீர்ப்பு போராட்டமும் நடைபெறவுள்ளது. ------------------------------------------------------------------------------------------------- தமிழர் பிரதேசத்தில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் பாலியல் துஸ்பிரயோகங்கள் தற்கொலைகள் மதுபோதை பாவனைகள் சட்டவிரோத பணக்கொடுங்கல் வாங்கல் வன்முறைகள் போன்றவற்றுக்கு எதிராக விழிப்பூட்டும் இக்கவனயீர்ப்பு போராட்டம் அரசியலுக்கு அப்பால் பொதுநோக்கத்தை அடிப்படையாக கொண்டு நடைபெறவுள்ளதாக ஏற்பாட்டுக்குழு அறிவித்துள்ளது. ------------------------------------------------------------------------------------------------- வடமாராட்சி பொதுமக்களின் ஏற்பாட்டில் நடைபெறும் இக்கண்டன ஆர்பாட்டம் வடமாகணசபை உறுப்பினர் எஸ்.சுகீர்தன் தலைமையில் நெல்லியடி நகரில் ஆரம்பித்து கரவெட்டி பிரதேச செயலகத்தில் நிறைவடையவுள்ளது. அங்கு கரவெட்டி பிரதேச செயலாளர் எஸ். சிவசிறி மற்றும் பருத்தித்துறை பிரதேச செயலாளர் இ.த.ஜெயசீலன் ஆகியோர் ஊடாக மாவட்ட அரச அதிபரிற்கு மகஜர்கள் கையளிக்கபடவுள்ளது. அத்துடன் வடமாகண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வடமாகண பொலிஸ்மா அதிபர் ஆகியோருக்கு மகஜர்கள் அனுப்பி வைக்கப்படவுள்ளது. ------------------------------------------------------------------------------------------------- இக் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு வடமராட்சி பிரதேச செயலகங்கள். பிரதேச சபைகள் மற்று மற்றும் வர்த்தக சங்கங்கள் மற்றும் மகளிர் அமைப்புக்கள் மற்றும் அரச,அரச சார்பற்ற நிறுவனங்கள்.பொது அமைப்புக்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. ------------------------------------------------------------------------------------------------- அண்மையில் வீதியால் ஒட்டோவில் பயணித்துக் கொண்டிருந்த யுவதியொருவர் கடத்தி செல்லப்பட்டு மூவரால் பாலியல் வல்லுறவிற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகள் இதுவரை பொலிஸாரால் கைதாகியிருக்கவில்லை. இதன் தொடர்ச்சியாகவே இவ்வார்ப்பாட்டம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment