Breaking News

JOINING THE COMMUNITIES--------------------->Contect:as soon as
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016

RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.

Friday, March 7, 2014

மனைவி, மகளுக்கு சீட்: லல்லு மீது மூத்த தலைவர்கள் அதிருப்தி

பாட்னா,மார்ச்.07 (டி.என்.எஸ்) பாராளுமன்ற தேர்தலில் மனைவி, மகளை லல்லு பிரசாத் யாதவ் வேட்பாளராக அறிவித்துள்ளதால் மூத்த தலைவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். -------------------------------------------------------------------------------------- பாராளுமன்ற தேர்தலில் பீகாரில் லல்லுபிரசாத் யாதவின் ராஷ்டிரீய ஜனதா தளம் கட்சி காங்கிரசுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. நேற்று லல்லு பிரசாத் யாதவ் தனது கட்சி போட்டியிடும் 25 தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். -------------------------------------------------------------------------------------- லல்லு பிரசாத் யாதவ் ஊழல் வழக்கில் தண்டனை பெற்றதால் அவர் தேர்தலில் போட்டியிடவில்லை. இதனால் அவர் தனது சரன் தொகுதியில் மனைவியும், முன்னாள் முதல்–மந்திரியுமான ராப்ரிதேவியை வேட்பாளராக நிறுத்தியுள்ளார். -------------------------------------------------------------------------------------- இதேபோல் லல்லுபிரசாத் தனது இளைய மகள் மிசா பார்தியை பாடலிபுத்திரா தொகுதி வேட்பாளராக அறிவித்துள்ளார். -------------------------------------------------------------------------------------- லல்லுபிரசாத் சிறை சென்றபோது அவரது மனைவி மற்றும் மகன்கள்தான் கட்சி பணிகளை கவனித்து வந்தனர். ஆனால் மகளுக்கு சீட் கொடுத்து இருப்பது கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. -------------------------------------------------------------------------------------- பாடலிபுத்திரா தொகுதியை லல்லுபிரசாத் யாதவின் நெருங்கிய ஆதரவாள ரான ராம்கிரிபால் யாதவ் கேட்டு இருந்தார். இவர் ஏற்கனவே பாட்னா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று உள்ளார். -------------------------------------------------------------------------------------- தற்போது டெல்லி மேல்– சபை எம்.பி.யாக இருக்கும் ராம்கிரிபால் யாதவ்- பாடலிபுத்ரா தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து இருந்தார். ஆனால் அவருக்கு தொகுதி ஒதுக்கப்படாததால் ராம்கிரிபால் யாதவ் கட்சியில் இருந்து ராஜினாமா செய்தார். -------------------------------------------------------------------------------------- கடந்த 2009 பாராளுமன்ற தேர்தலில் லல்லு பிரசாத் யாதவ் பாடலிபுத்ரா, சரன் ஆகிய 2 தொகுதியில் போட்டியிட்டார். இதில் பாடலிபுத்ராவில் தோல்வி அடைந்தார். சரன் தொகுதியில் வெற்றி பெற்றார். -------------------------------------------------------------------------------------- இப்போது இந்த தொகுதியையும் மற்றவர்களுக்கு கொடுக்காமல் மனைவி– மகளையே வேட்பாளர்களாக நிறுத்தி இருப்பது கட்சியில் மூத்த தலைவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. -------------------------------------------------------------------------------------- லல்லு பிரசாத் யாதவ் முன்பு இந்திரா ஆட்சியில் மிசா சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்தி கைதானார். இதனால் தனது மகளுக்கு மிசாபார்தி என்று பெயர் சூட்டினார்

No comments:

Post a Comment