Breaking News
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.
Monday, February 24, 2014
ஒரு தனி மனிதனுக்காக
ஒரு தனி
மனிதனுக்காக
அப்பாவி மூன்று உயிர்களை பலி வாங்குவது காங்கிரஸ் அரசின் பழி வாங்கும் எண்ணத்தையே பிரதிபலிக்கிறது ..
---------------------------------------------------------------------------------------
போப்பால் மத்திய இந்தியாவில் உள்ள ஒரு நகராகும். இது மத்தியப்பிரதேச மாநிலத்தின் தலைநகரமாகும். மேலும் இந்நகரம் இதே பெயருடைய ஒரு மாவட்டத்தின் தலைநகரமுமாகும்.
போபால் இந்தியாவின் 16வது மிகப்பெரிய நகரமாகும், மேலும் இது உலகின் 134வது பெரிய நகரமாகும்.
-------------------------------------------------------------------------------------
உலகின் மிக மோசமான விபத்து டிசம்பர் 3, 1984, ல் இந்தியாவில் உள்ள போபாலில் ஏற்பட்ட நச்சு வாயுக் கசிவினால் ஏற்பட்ட பல்லாயிரக்கணக்கான உயிரிழப்புகளை ஏற்படுத்தியது.
-------------------------------------------------------------------------------------
மத்தியப்பிரதேச தலைநகரான போபாலில் பன்னாட்டு நிறுவனமான யூனியன் கார்பைடு ஆலையிலிருந்து விஷ வாயுவான மிதைல் ஐசோ சயனைட் எனும் வாயு கசிந்தது. இதில், சுமார் 15 ஆயிரத்து 274 பேர் மடிந்தனர். விஷவாயுவை சுவாசித்ததால் 5 லட்சத்து 74 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டனர். இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் இன்னமும் கூட உடல் ஊனமுற்றவர்களாக பிறக்கின்றனர்.
-------------------------------------------------------------------------------------
இந்த வழக்கு இன்னமும் கூட முதன்மை ஜுடிசியல் மேஜிஸ்ட்ரேட் அளவில் தான் நடந்து வருகிறது. யூனியன் கார்பைடு நிறுவனத்தின் தலைவரான வாரன் ஆண்டர்சனை இந்தியா வுக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தப்படவில்லை. இதற்கு மத்திய அரசும் காரணம் என்று தன்னார் வத் தொண்டு அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன.
-------------------------------------------------------------------------------------
விஷவாயு கசிந்த ஆலையிலிருந்து இன்னமும் கூட நச்சுப் பொருட்கள் முழுமை யாக அகற்றப்படாத நிலை உள்ளது. 67 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இந்த ஆலையில் இன்னமும் கூட நச்சுப் பொருட் கள் உள்ளன.
-------------------------------------------------------------------------------------
விபத்து நடந்த போது யூனியன் கார்பைடு தலை வராக இருந்த ஆண்டர்சனை கைது செய்ய உள்ளூர் நீதிமன்றம் பலமுறை வாரண்ட் பிறப்பித்தது. ஆனால், மத்திய புலனாய்வுத்துறை அவரை இந்தியாவுக்கு கொண்டுவர எந்த நடவடிக்கையும் பிறப்பிக்கப்படவில்லை. இந்திய அரசினால் தேடப்படும் குற்ற வாளியாக அறிவிக்கப்பட்ட ஆண்டர்சன் இன்னமும் நியூயார்க் அருகில் உள்ள தீவு ஒன்றில் உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். பல ஆயிரம் பேர் சாவுக்கு காரணமான இந்தவழக்கில் ஆண்டர்சன் ஒருமுறை கூட விசாரிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-------------------------------------------------------------------------------------
அதுமட்டுமல்ல உலகின் மிக மோசமான தொழிற்சாலை விபத்துகளில் ஒன்றாக கருதப்படும் போபால் விஷவாயு கசிவு தொடர்பாக, இதுவரை ஒருவர் கூட தண்டிக்கப்படவில்லை.
யூனியன் கார்பைடு ஆலையை டோவ் கெமிக்கல் என்ற நிறுவனம் வாங்கி நடத்தி வருகிறது. மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வனத் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேசும், போபால் விஷவாயு கசிவு நிவாரணத் துறை அமைச்சர் பாபுலால் கவுரும் இந்த நிறுவனத்திற்கு ஆதரவாக செயல்படுகின்றனர் என்றும், நச்சுக் கழிவு எதுவும் ஆலைக்குள் இல்லை என்று சாதிக்கின்றனர் என்றும் தன்னார்வ அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன.
--------------------------------------------------------------------------------------------------
1989ம் ஆண்டு பிப்ரவரி 15ம்தேதி உச்சநீதிமன்றத் தின் தலையீடு காரணமாக ஏற்பட்ட உடன்பாட்டின் படி யூனியன் கார்பைடு நிறுவனம் ரூ.715 கோடி வழங்க வகை செய்தது. அரசுக் கணக்குப்படி 3 ஆயிரம் பேர் இறந்துள்ளனர். ஒரு லட்சத்து 2 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த தொகை எந்த வகை யிலும் போதுமானது அல்ல என்பது ஒருபுறமிருக்க, இதுவும் கூட முறையாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்படவில்லை என்று போபால் விபத்தால் பாதிக்கப்பட்டோர் அமைப்பின் தலைவர் அப்துல் ஜப் பார் கூறியுள்ளார்.
-------------------------------------------------------------------------------------------
இதனால் இறந்தவர் குடும்பத்திற்கு தலா 1 லட்சம் ரூபாயும், பாதிக்கப்பட்ட வர்களுக்கு ரூ.25 ஆயிரமும் மட்டும்தான் 1992ம் ஆண்டு முதல் 2004ம் ஆண்டு வரை வழங்கப்பட்டுள்ளது என் றும் அவர் கூறினார். போபால் விஷவாயுவால் இறந்தோர் நினைவாக ரூ.114 கோடி செலவில் நினைவகம் அமைக் கப்போவதாக மத்திய அரசும், மத்தியப்பிரதேச அரசும் அறிவித்துள்ளன. இறந்த வர்களுக்கு நினைவ கம் அமைப்பதை விட இன்னமும் உயிரோடு இருந்து சித்ரவதைப் பட்டுக் கொண் டிருக்கும் மக்களுக்கு இந்த தொகையை தரலாம் என்று தன்னார்வ அமைப்புகள் கூறியுள்ளன.
------------------------------------------------------------------------------------------------
பல்லாயிர கணக்கான உயிரை பலி வாங்கிய போபால் விஷ வாயு குற்றவாளிகளுக்கு தலா 2 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. ஆனால் 14 பேர் உயிரை பலி வாங்கிய சம்பவத்தில் அப்பாவிகளான இந்த படு கொலைக்கு முற்றிலும் சம்பந்தம் இல்லாத முருகன், பேரறிவாளன், சாந்தன் மூன்று பேருக்கு மட்டும் தூக்குதண்டனை விதிக்கப்பட்டுள்ளது .மேலும் இந்த வழக்கில் உண்மையான குற்றவாளிகள் யார் என்பதை அறிவிக்கவில்லை..
--------------------------------------------------------------------------------------------
மத்திய அரசு ராஜீவ் காந்தி என்ற ஒரு தனி மனிதற்காக மட்டும் இந்த மூன்று உயிர்களை பலிவாங்குவது மிகவும் தவறான கொல்கை. தனி ஒரு மனிதனுக்கு ஒரு சட்டம் மக்களுக்கு ஒரு சட்டம் இந்தியாவில் எங்கும் இல்லாத ஒன்று.
--------------------------------------------------------------------------------------------
ஒரு தனி மனிதனுக்காக அப்பாவி மூன்று உயிர்களை பலி வாங்குவது காங்கிரஸ் அரசின் பழி வாங்கும் எண்ணத்தையே பிரதிபலிக்கிறது ..
--------------------------------------------------------------------------------------------
டெல்லி: ராஜீவ் கொலை வழக்கில் நளினி உள்ளிட்ட மேலும் 4 பேரை விடுவிக்க தடைக்கோரி மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசின் விடுதலை செய்யும் முடிவை எதிர்த்து மத்திய அரசு, சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளது. சிறையில் உள்ள ரவிச்சந்திரன், ராபர்ட் பாயஸ், ஜெயக்குமாரை விடுவிக்க மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)









No comments:
Post a Comment