Breaking News

JOINING THE COMMUNITIES--------------------->Contect:as soon as
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016

RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.

Saturday, February 22, 2014

நோ பயர் ஸோன் ஆவணப்படத்திற்கு இந்தியாவில் தடை

நோ பயர் ஸோன் ஆவணப்படத்திற்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் செனல்4 ஊடகத்தினால் வெளியிடப்பட்ட இலங்கை தொடர்பான சர்ச்சைக்குரிய நோ பயர் ஸோன் மற்றும் கில்லிங் பீல்ட்ஸ் ஆவணப்படங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்திய மத்திய திரைப்படச் சபை நாட்டின் திரையறங்குகளில் செனல்4 ஆவணப்படங்களை திரையிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்தக் காணொளியை இந்தியாவில் இலவசமாக இணையத்தில் பிரசூரிப்பதற்கு ஆவணப்படத்தின் இயக்குனர் கலம் மக்ரே தெரிவித்துள்ளார். திரையிடுவதற்கு தடை விதிக்கப்பட்ட இலங்கை, மலேசியா, நேபாளம் போன்ற நாடுகளில் இணையத்தில் இலவசமாக பார்வையிடக் கூடிய வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இலங்கையுடனான உறவுகளில் வரிசல் ஏற்படக் கூடும் என்ற காரணத்தினால் இந்திய அதிகாரிகள் திரைப்படத்தினை தடை செய்துள்ளதாக செனல்4 ஊடகம் தெரிவித்துள்ளது. அநேகமான காட்சிகள் பார்க்கக் கூடிய வகையில் இல்லை என இந்திய திரைப்பட தணிக்கைச் சபை அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் குறித்த ஆவணப்படத்தை டெல்லியி;ல காட்சி;ப்படுத்தும் நோக்கில் இ;ந்தியாவிற்கு விஜயம் செய்ய முயற்சித்த ஆவணப்படத்தின் இயக்குனர் கலம் மக்ரேவிற்கு வீசா வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கருத்து சுதந்திரத்தை மதிக்கும் இ;ந்தியாவில் இவ்வாறான அரசியல் நோக்கத்தை முன்னிலைப்படுத்திய நடவடிக்கைகள் இடம்பெறுகின்றமை ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என மக்ரே தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கத்தின் அழுத்தங்கள் காரணமாகவே ஆவணப்படத்தை திரையிடுவதற்கு அனுமதியளிக்கப்படவில்லை என குறிப்பிடப்படுகிறது. யுத்த குற்றச் செயல் தொடர்பிலான விசாரணைகளை ஒடுக்குவதற்கு அரசாங்கம் முயற்சித்து வருவதாக மக்ரே குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment