Breaking News
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.

Monday, February 17, 2014
எகிப்த்தில் குண்டுவெடிப்புச் சம்பவங்கள் தொடர்கின்றன-
எகிப்த்தில் இடம் பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவத்தில் உல்லாசப் பயணிகளின் பேரூந்து தாக்கப்பட்டு சாரதியுட்பட நான்கு பிரயாணிகள் மரணமடைந்ததோடு 14 பேர் காயமுற்றுள்ளனர். இறந்தவர்களில் மூன்றுபேர் தென்கொரியாவைச் சேர்ந்தவர்களென்றும், இச் சம்பவம் இஸ்ரேலின் எல்லைப்புறத்தில் இடம் பெற்றுள்ளதாகவும் எகிப்த்து நாட்டின் வெளிவிவகாரச் செயலர் அலுவலகம் தெரிவிக்கிறது.
---------------------------------------------------------------------------------------------
எகிப்த்து நாட்டின் முன்னாள் ஜனாதிபதி மொகமட் மூர்ஸி கைதான காலத்திலிருந்து அங்கு குண்டு வெடிப்புகள் இடம் பெற்ற வண்ணமுள்ளன. நேற்றைய ஞாயிற்றுக்கிழமை முன்னைய ஜனாதிபதி வானூர்த்தி (Helicopter) மூலம் விசாரணைக்கென கொண்டுவரப்பட்டு, விசாரணை 23.02 வரை பின் போடப்பட்டது. வன்முறைகளில் ஈடுபட்டு நாட்டைக் காட்டிக்கொடுக்கும் சதிவேலைகளை முன்னெடுத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் மூர்ஸி வெளியில் சப்தம் வரமுடியாத கண்ணாடிக் கூண்டினுள் அடைக்கப்பட்டு விசாரணைக்கு அழைத்து வரப்பட்டார்.
---------------------------------------------------------------------------------------------
அவர் பேசிய எதையும் புரிந்துகொள்ள முடியவில்லையென அவரின் சட்டதரணி தெரிவித்தார். நீதிபதி அணிந்திருக்கும் Ear-Phone கருவி மூலம் மட்டும் மூர்ஸியின் உரையாடலை நீதிபதியால் கேட்க முடியும். சென்ற முறை விசாரணைக்கு அழைத்து வரப்பட்டபோது மூர்ஸி கூக்குரலிட்டு எதிர்ப்பைத் தெரிவித்ததன் விளைவால் இம்முறை கண்ணாடிக் கூண்டுக்குள் மூர்ஸியைக் கொண்டு வரவேண்டியதாயிற்றென அங்கு கடமையிலிருக்கும் இராணுவ அதிகாரி தெரிவித்தார். சென்ற வருடம் July மாதம் இராணுவப் புரட்சி மூலம் மூர்ஸியின் ஆட்சி கவிழ்க்கப்பட்டு ஜனாதிபதி மூர்ஸி உட்பட பலர் கைது செய்யப்பட்டனர்.
மூர்ஸிமேல் சுமத்தப்பட்டுள்ள குற்றச் சாட்டுக்கள் சகலதும் கடும் பாதகமான தீர்ப்பைக் கொண்டுவரக் கூடியவையென சட்டத்தரணிகள் கூறுகின்றனர். மூர்ஸியின் ஆதரவாளரிற்கும் எதிரணியினரிற்குமிடையே. ஜனாதிபதி மாளிகை முன்பாக 2012 இல் இடம் பெற்ற கலவரத்தில் இறந்த பத்துப்பேரின் மரணத்திற்கும் இவருக்கும் பங்குப் பொறுப்பிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டிருக்கும் முன்னைய ஜனாதிபதி அந்நாட்டில் ஒரு பயங்கரவாதியைப்போல் கையாளப்படுகிறார்.
---------------------------------------------------------------------------------------------
மூர்ஸியின் வீழ்ச்சிக்குப்பின் எகிப்தில் குண்டு வெடிப்புச் சம்பவங்கள் தொடர்ந்து இடம் பெறுகின்றன. முஸ்லீம்களின் இரு பிரிவினருக்கிடையே இடம் பெறும் புனிதப்போர் எகிப்தின் அழகையும், நின்மதியையும் குலைத்து நிற்கிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment