Breaking News
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.
Thursday, February 13, 2014
யாழில் விமானப்படைச் சிப்பாய் உட்பட இராணுவத்துடன் தொடர்புடைய டில்லு பாதாள உலகின் நால்வர் கைது
யாழ்ப்பாணத்தில் செயற்பட்டு வரும் இராணுவத்துடன் தொடர்புடைய பாதாள உலக ஆயுதக் கும்பல்களுள் ஒன்றான டில்லு குழுவினை சேர்ந்தவர்களென அடையாளப்படுத்தப்பட்ட பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொக்குவில் பகுதியில் வீடொன்றினுள் பதுங்கியிருந்த நிலையில் அவ்hகள் நேற்று (11.02.14) கைதாகினர்.
இவர்களுள் இலங்கை விமானப்படையினை சேர்ந்த ஒருவரும் அடங்கியிருந்துள்ளார். தெற்கின் ஜாஎல பகுதியனை சேர்ந்த இருவர் மற்றும் கொட்டாவா அங்கொடைப் பகுதிகளை சேர்ந்த ஒவ்வொருவரென இருவரும் உள்ளடங்கியுள்ளனர்.
முன்னதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை மூளாய் பகுதியில் நடந்த மோதல் சம்பவமொன்றின் தொடர்ச்சியாக கொக்குவில் பகுதியில் நடத்தப்பட்ட தேடுதலின் போது ஒன்பது உள்ளுர் இளைஞர்கள் கைதானதுடன் அங்கு ஆயுதங்கள் மற்றும் இராணுவ சீருடைகளும் மீட்கப்பட்டிருந்தன.
விசாரணைகளில் கிடைக்கப்பெற்ற தகவல்களினை அடுத்து நேற்று நடத்தப்பட்ட தொடர் தேடுதலில் மேலும் 4 சிங்களவர்கள் கைதாகியுள்ளனர். கைதானவர்களுள் இலங்கை விமானப்படையினை சேர்ந்தவரென அடையாளப்படுத்தப்பட்டவர் தற்போது அதிலிந்து விலகி இப்பாதாள கும்பலில் இருந்ததாக கூறப்படுகின்றது.
இதனிடையே ஏற்கனவே இதே போன்று கைதான ஆவா குழுவின் முக்கிய பிரமுகர்கள் பிணயில் வீடு செல்ல விண்ணப்பித்துள்ளனர். நாளை யாழ்.மேல் நீதிமன்றில் இம்மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment