Breaking News
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.
Friday, February 7, 2014
10வது ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ள ஃபேஸ்புக்
உலகம் முழுவதிலும் 120 கோடி வாடிக்கையாளர்களைக் கொண்ட சமூக வலைதளமான ஃபேஸ்புக், 10ஆவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
2004ஆம் ஆண்டு பிப்ரவரி 4ஆம் தேதி ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் மார்க் சூக்கர்பெர்க் என்பவரால் ஃபேஸ்புக் இணையதள சேவை ஏற்படுத்தப்பட்டது.
மாணவர்கள் தங்களுக்குள் தொடர்புகொள்வதற்கும், இணையத்தில் தங்களுக்கான அடையாளத்தை ஏற்படுத்திக் கொள்வதற்கும் இது உருவாக்கப்பட்டது.
உலக பணக்காரர்களில் ஒருவராக தன்னை மாற்றிய ஃபேஸ்புக், இந்த அளவுக்கு வரவேற்பைப் பெறும் என்று தான் கற்பனைகூட செய்ததில்லை என்று மார்க் தெரிவித்துள்ளார்.
மொபைல் சந்தையில் தனது கவனத்தை மந்தமான அளவிலேயே ஃபேஸ்புக் கொண்டிருந்தபோதிலும், பாதிக்கும் மேலான தனது விளம்பர வருவாய் மொபைல்களின் மூலம் பெறப்படுவதாக கடந்த வாரம் தெரிவித்துள்ளது.
மற்ற சமூக வளைத்தளங்களான பின்ட்ரெஸ்ட், டுவிட்டர், ஸ்னாப்சாட் போன்றவற்றின் வரவால் இளைஞர்களின் இடையே ஃபேஸ்புக்கிற்கான வரவேற்பு குறையும் என்று கருதப்பட்டது.
அடுத்த 3 ஆண்டுகளில் தனது 80 சதவீத வாடிக்கையாளர்களை ஃபேஸ்புக் இழக்கும் என்று அமெரிக்காவில் உள்ள பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தின் ஆய்வு ஒன்றில் கூறப்பட்டுள்ளது. எனினும் இந்த கணிப்புக்கு ஃபேஸ்புக் மறுப்பு தெரிவித்து சவால் விட்டுள்ளது.
2011ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2014ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரையிலான காலகட்டத்தில் 13 முதல் 17 வயதுக்கு உள்பட்ட 30 லட்சத்துக்கும் அதிகமான வாடிக்கையாளர்களை ஃபேஸ்புக் இழந்துள்ளதாக மற்றொரு ஆய்வு தெரிவித்துள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment