Breaking News
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.
Thursday, February 6, 2014
சீனா இந்தியா ஜப்பான் நாடுகளின் அதிகரித்து வரும் உலக அளவிலான இராணுவ பலம் ஐரோப்பாவை எச்சரிக்கிறது:
ஆசிய நாடுகளாகிய சீனா இந்தியா ஜப்பான், ஆகியவற்றின் உலக அளவில் பல மடைந்துவரும் தற்போதைய இராணுவ நிலைப்பாடு, ஜரோப்பாவை எச்சரிக்கும் வகையில் அமைந்திருப்பதாக லண்டன் நகரில் நேற்றைய புதன் கிழமை வெளியாகிய சர்வதேச யுத்த தந்திர வல்லுனர்களடங்கிய ஸ்தாபனத்தின் வருடாந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
உலகம் தழுவிய வகையில் 171 நாடுகளின் இராணுவப்பலம், அங்குள்ள போர்க்கருவி உற்பத்தியாக்கும் தொழிற்சாலைகள், இராணுவ உபகரணங்களுக்காக அந்நாடுகள் வருடம் ஒன்றிற்கு செலவிடும் தொகை போன்ற முழுமையான தகவல்கள் மூலம், உலக இராணுவ சமநிலை மேலான நிதானமான பொருளடக்கக் கண்ணோட்டத்தை அந்த அறிக்கை கொண்டுள்ளது.
ஆசியக் கண்டத்தை சகல வழிகளிலும் கலவரத்திலாற்றும் அமைதியற்ற பாதுகாப்பு நிலைமையாலும், நாடுகளுக்கிடையே காணப்படும் அரசியல் அழுத்தங்களாலும் ஆசிய நாடுகள் தங்கள் இராணுவத்தைப் பலப்படுத்த வேண்டியுள்ளது. அதில் சீனா, ஆசியாவில் மட்டுமல்லாது உலகில் மிகத்தரமான இராணுவப் பலம் பொருந்திய (Super Power) நாடாக மாறிவருகிறது. சென்ற வருடத்தில் போர்க்கருவிகளுக்கு மட்டும் பதினோராயிரத்து இருநூறு கோடி அமெரிக்க டொலர்களை செலவிட்டுள்ளது..
பல போர் விமானங்களைத் தாங்கிச் செல்லக்கூடியதும், விமானங்கள் இறங்கி ஏறக்கூடியதுமான பிரமாண்டமான மேற் தளங்களையுடைய போர்க்கப்பல்களை உற்பத்தியாக்கியும், இந்திய நாட்டின் உற்பத்தியான மிக்-29-K ரக போர் விமானங்களை வெற்றிகரமாக விமானப்படையினர் உபயோகித்தும் தம் இராணுவப் பலத்தை இந்தியா அதிகரித்துக் கொண்டுள்ளது. இதற்காக 2013 இல் மட்டும் மூவாயிரத்து அறுநூற்று முப்பது கோடி அமெரிக்க டொலர்களை இந்தியா செலவிட்டுள்ளது.
ஜப்பான் நாடானது சீனாவின் மேற்குக் கடற்பிராந்தியத்தில் தன் வலிமையை அதிகரிக்கச் செய்வதற்கு, சென்ற வருடத்தில் மட்டும் முப்பத்தைந்து போர் விமானங்களை விமானப் படையினருக்குத் தந்து அவர்களை மேலும் பலப்படுத்தியுள்ளது. ஜயாயிரத்து நூற்றுப்பத்து கோடி அமெரிக்க டொலர்களை சென்ற வருடம் பாதுகாப்பு நிதிக்காக் ஒதுக்கியுள்ளது.
மிகப் பெரிய பொருளாதார வீழ்ச்சி காரணமாக நடைமுறையில் இருந்துவரும் சிக்கனமான செலவீட்டுத்திட்டத்தின் மத்தியிலும், அமெரிக்கா 60 ஆயிரம் கோடி அமெரிக்க டொலர்களை இராணுவ ஆயுதங்களுக்கும் துருப்பினரது பராமரிப்பிற்கும் செலவு செய்துள்ளது. ஜரோப்பா தனது சேமிப்புத் திட்டத்தின் கீழ் பல கோடி ஆயிரம் யூரோக்களை சேமிக்கும் நோக்கில் தன் இராணுவப் பலத்தை நவீனப்படுத்தும் பாதையிலிருந்து விலகியுள்ளதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
ஐரோப்பிய செய்தியார் மகேந்தி-
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment