Breaking News

JOINING THE COMMUNITIES--------------------->Contect:as soon as
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016

RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.

Wednesday, September 3, 2014

தலைகீழாக பிறந்த மனிதன். உணர்ச்சிமயமான பேச்சாளர்!!!

தென்அமெரிக்காவில் ஒரு மனிதன் கடுமையான உடற்குறைபாடுகளுடன் பிறந்துள்ளார். இவரது தலை தலைகீழாக உள்ளது.
Claudio Vieira de Oliveira 37-வயதுடைய இவரது கால்கள் மோசமாக சிதைக்கப்பட்டும், கைகள் கிட்டத்தட்ட எதுவித உபயோகமுமற்ற நிலையிலும், கழுத்து தானாகவே பின்பக்கம் சரிந்தும் அமைந்துள்ளன. இவர் பிறந்த உடனேயே இவர் பிழைக்கமாட்டார் என வைத்தியர்கள் நம்பியதால் இவருக்கு உணவூட்ட வேண்டாமென தாயாரிடம் கூறியுள்ளனர். ஆனால் பிறேசிலைச் சேர்ந்த Claudio தனது தீவிர குறைபாடுகளையும் தோற்கடித்து ஒரு கணக்காளராக பட்டம் பெற்றுள்ளார். அத்துடன் மற்றவர்களை ஊக்குவித்து உதவும் நோக்கத்துடன் மேடைகளில் பேச்சாளராகவும் செயல்படுகின்றார். தான் சிறுவனாக இருக்கும் போதே தன்னை எப்போதும் சுறுசுறுப்பாக வைத்துக் கொண்டதாகவும் மற்றவர்களை எதிர்பார்த்து இருப்பதை விரும்பவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
------------------------------------------------------------------------ கணக்கியல் ஆராய்ச்சி மற்றும் சேவைபெறுநர்களிற்கு ஆலொசனை வழங்குதல போன்ற சேவைகளையும் செய்து வருகின்றார். தொலைக்காட்சியை இயக்குதல், கைத்தொலைபேசியை உபயோகித்தல் ,வானொலியை இயக்கல், கணனி மற்றும் இணையம் போன்றனவற்றை தானாகவே செய்வதாகவும் கூறியுள்ளார். ------------------------------------------------------------------------ வாயில் ஒரு பேனையை வைத்து தட்டச்சு அடித்தல், தொலைபேசி மற்றும் கணனி சுட்டிகளை இயக்க உதட்டை உபயோகிப்பது என தனது தேவைகளை நிறைவேற்றிக் கொள்கின்றார். விசேடமாக தயாரிக்கப் பட்ட காலணிகளை அணிந்து கொண்டு நகரத்தை சுற்றி வருகின்றார். ------------------------------------------------------------------------ இவரது இந்த சுயாதீன நடவடிக்கைகளினால் State University of Feira de Santana . பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று கணக்காளராக தகுதிபெற்றுள்ளார். வைத்தியர்கள் உட்பட பலரும் Claudio இறந்துவிடுவார் என கூறியதாக தாயார் தெரிவித்தார். இவரின் குறைபாடுகளை தாங்கள் சரிப்படுத்த முயலவில்லை எனவும் மற்றய மக்களைப்போல் சாதாரண வாழ்க்கை வாழ வேண்டுமென விரும்பியதாகவும் அவர் மேலும் கூறினார். 8-வயதுவரை தூக்கிச்செல்லப்பட்டு கொண்டிருந்த Claudio எட்டாவது வயதில் முழங்காலால் நடக்க ஆரம்பித்துள்ளார். ------------------------------------------------------------------------ தன்னை ஒரு வித்தியாசமான மனிதனாக நினைக்கவில்லை சாதாரணமானவனாகவே நினைக்கின்றேன் எனவும் Claudioகூறியுள்ளார்.

No comments:

Post a Comment