Breaking News
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.

Friday, February 14, 2014
திருகோணமலையிலும் மனிதப்புதைகுழியா?
இலங்கையின் கிழக்கே திருகோணமலை நகரின் விளையாட்டு மைதானம் ஒன்றின் குழியிலிருந்து மனித எச்சங்கள் என சந்தேகிக்கப்படும் எலும்புகள் காணப்படுவது குறித்து காவல் துறை தனது விசாரணையை ஆரம்பித்துள்ளது.
---------------------------------------------------------------------------------------------------
நகரசபை நிர்வாகத்திலுள்ள மெக்கசர் விளையாட்டு மைதான புனரமைப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களினால் இவை கணடு பிடிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.
---------------------------------------------------------------------------------------------------
இது குறித்து தமிழோசையுடன் பேசிய காவல் துறையின் ஊடகப் பேச்சாளரான அஜித் ரோஹன, மைதானத்தில் குறிப்பிட்ட பகுதி துப்பரவு செய்யப்பட்ட போது 5 அடி ஆழத்தில் காணப்பட்ட குழியொன்றில் இந்த எலும்புகள் காணப்பட்டதாக கூறினார்.
---------------------------------------------------------------------------------------------------
இந்த எலும்புகள் மனித எச்சங்களாக இருக்கலாம் என சந்தேகம் இருந்தாலும் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
---------------------------------------------------------------------------------------------------
காவல்துறையால் திருகோணமலை நீதிமன்றத்தில் இது தொடர்பில் முன் வைக்கப்பட்ட அறிக்கையின் பேரில் வியாழக்கிழமை மாலை மஜிஸ்திரேட் டி. சரவணராஜா அந்த இடத்தை நேரில் பார்வையிட்டார்.
---------------------------------------------------------------------------------------------------
எதிர்வரும் புதன்கிழமை வரை அந்த பகுதிக்குள் வெளியார் நடமாட்டத்திற்கு தடை விதித்த அவர், பாதுகாப்பு உறுதிப்படுத்தல் தொடர்பிலும் காவல் துறைக்கு உத்தரவு பிறப்பித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment