Breaking News

JOINING THE COMMUNITIES--------------------->Contect:as soon as
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016

RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.

Friday, December 20, 2013

நவீன அடிமை குற்றங்களைத் தடுக்க பிரிட்டன் திட்டம்

பிரிட்டன் உள்துறை அமைச்சர் தெரசா மே நவீனகால- அடிமை முறை மற்றும் மனிதக் கடத்தல்களை தடுப்பதற்காக பிரிட்டன் அரசாங்கம், கடுமையான தடை நடவடிக்கைகளை கொண்டுவர திட்டமிட்டுள்ளது. இதற்கான பரிந்துரைகளை பிரிட்டன் உள்துறை அமைச்சர் தெரசா மே முதலில் முன்வைத்திருந்தார். இவ்வாறான மனிதக் கடத்தல்கள் மற்றும் நவீனகால- அடிமை முறையில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கான தண்டனைக் காலத்தை 14 ஆண்டு சிறையிலிருந்து ஆயுள்கால சிறையாக உயர்த்துவதற்கு கடந்த ஆகஸ்டில் அவர் பரிந்துரை செய்திருந்தார். புதிய திட்டத்தின்படி, அடிமை முறை- ஒழிப்புக்கான ஆணையாளர் ஒருவரும் நியமிக்கப்படவுள்ளார். இவ்வாறான குற்றச்செயல்களால் பாதிக்கப்பட்டவர்களின் துயரங்கள் பற்றி தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஃப்ரான்க் ஃபீல்ட் மேற்கொண்ட மீளாய்வு அறிக்கையும் வெளியிடப்படுகின்றது. பிரிட்டனில் நவீனகால- அடிமை முறையால் பாதிக்கப்பட்டவர்கள் சுமார் 10 ஆயிரம் பேர் இருப்பதாக அவரது அறிக்கை கணக்கிட்டுள்ளது.

No comments:

Post a Comment