Breaking News

JOINING THE COMMUNITIES--------------------->Contect:as soon as
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016

RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.

Tuesday, December 17, 2013

கறுப்பு பண விவாரம்: ராம் ஜெத்மலானியின் மனு ஏற்பு

வெளிநாட்டில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டுள்ள இந்தியர்களின் கறுப்பு பணத்தை திரும்பக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க மத்திய அரசு தயங்குவதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும், 2 மனுக்களையும் உச்சநீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்துள்ளார். அதில், ஆஸ்திரியா நாட்டை சேர்ந்த லீச்டென்ஸ்டீன் வங்கியில் கறுப்பு பணம் வைத்திருப்பவர்களின் மீது மத்திய அரசு தனது விசாரணையை நடத்தி முடித்துள்ள நிலையில், அப்பணத்தை பதுக்கி வைத்திருப்ப வர்களின் பட்டியலை வெளியிட மறுக்கிறது. எனவே, கறுப்பு பணத்தை பதுக்கி வைத்திருப்பவர்கள் பட்டியலை உடனடியாக வெளியிட உச்சநீதிமன்றம் உத்தரவிடுமாறு அந்த மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், இதுகுறித்து கீழ் நீதிமன்றம் கடந்த 2011 வருடம், ஜூலை மாதம், 4ந்தேதி தனது உத்தரவில் கறுப்பு பணம் பதுக்கி வைத்திருப்பவர்கள் பட்டியலை துரிதமாக வெளியிடக் கூறியது. இத்தீர்ப்பு வெளியாகி 2 வருட காலம் முடிந்த பின்பும் இதுபற்றி மத்திய அரசு மற்றும் இத்துறைக்கு பொறுப்பேற்றுள்ள அமைச்சரும் சிறிதும் கவலைப்படவில்லை என குற்றஞ்சாட்டிய அவர், கீழ் நீதிமன்றத்தின் தீர்ப்பை அரசு அலட்சியமாக கருதிவிட்டதாகவும் மனுவில் கூறியுள்ளார். இந்த வழக்கை விரைந்து விசாரிக்குமாறும் உச்சநீதிமன்றத் திடம் கோரியுள்ளார். இவரது மனுக்களை ஏற்ற தலைமை நீதிபதி பி.சதாசிவம் தலைமையிலான பெஞ்ச், தனது விசாரணையை வரும் ஜனவரி 10-ந் தேதிக்கு ஒத்திவைத்தது. மேலும் அவர் தாக்கல் செய்துள்ள 2 மனுக்களும் பரிசீலிக்கப்படும் எனவும் தலைமை நீதிபதி தெரிவித்தார்.

No comments:

Post a Comment