Breaking News

JOINING THE COMMUNITIES--------------------->Contect:as soon as
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016

RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.

Friday, December 13, 2013

மக்கள் வாழ்இடங்களில் இருந்து படையினர் வெளியேற்றப்பட வேண்டும் -ஐ.நா அதிகாரி!

பொதுமக்கள் வாழ் இடங்களில் இருந்து படையினர் வெளியேற்ற வேண்டும் என்று ஐ.நா.வின் அகதிகளுக்கான விசேட அறிக்கையாளர் சலோகா பெயானி ஆணைக்குழுவுக்கு அறிக்கை கொடுத்துள்ளார். படையினரால் கையகப்படுத்தப்பட்ட காணிகளின் விபரங்க ளின் வெளிப்படைத் தன்மை பேணப்படுவதுடன் பொது மக்களின் இடங்களில் இருந்து படையினர் முற்றாக வெளியேற்றப்பட வேண்டும் என்று ஐ.நா.வின் அகதிகளுக்கான விசேட அறிக்கையாளர் சலோகா பெயானி தெரிவித்துள்ளார். இலங்கையில் போரினால் இடம் பெயர்ந்தவர்களின் பிரச்சினைக்கு ஒரு காத்திரமான தீர்வைக் காண்பதற்கு வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்ட யுக்தி தேவை என்றும் அவர் கூறியுள்ளார்அண்மையில் சிறீலங்காவிற்கு பயணம் செய்த அவர், அது குறித்த அறிக்கை ஒன்றை ஐ.நா.மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு சமர்ப்பித்துள்ளார். அந்த அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளர். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ள தாவதுஇலங்­கையில் போர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை அங்குள்ள பெண்கள் மற்றும் சிறுமிகளின் உடல் ரீதியான தன்னாதிக்கம், அவர்களது இனப்பெருக்கத்துக்கான உரிமை ஆகியவை பாதுகாக்கப்பட வேண்டும்.காணிகளுக்கான உரிமை பாதுகாக்கப்படுவதுடன், உரிய விகிதத்தில், ''தேசிய பாதுகாப்புக்கான இராணுவ கரிசனைகளும், பொதுமக்களின் நடமாடுவதற்கான, வாழ்வதற்­கான இடத்தை தேர்வு செய்வதற்கான உரிமையும்'' சமநிலையில் பேணப்பட வேண்டும் .இராணுவ பிரசன்னம் இராணுவத்தினால் கையகப்படுத்தப்பட்ட காணிகளின் விபரங்களில் வெளிப்படைத்தன்மை பேணப்படுவதுடன், பொதுமக்கள் செயற்படும்இடங்களில் இருந்து இராணுவம் முற்றாக வெளியேற்றப்பட வேண்டும். கடந்த 30 வருட போரினால் பாதிக்கப்பட்ட இடம்பெயர்ந்தவர்கள் தமது சொந்த இடங்களுக்கு திரும்புவதற்கான ஒரு நிலைமை ஏற்படுத்தப்பட வேண்டும். போருக்குப் பின்னர் நிவாரண நடவடிக்கைகளில் இருந்து அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு மாறுகின்ற காலப்பகுதியில்,இடம்பெயர்ந்தவர்களின் பிரச்­சினைகளை தீர்ப்பதற்கான காத்திரமான நடவடிக்கைகளை அரசாங்கமும், வளர்ச்சிக்கான செயற்பாட்டாளர்களும் மேற்கொள்ள வேண்டும். போரில் இடம்பெயர்ந்த அகதிகளை மீளக்குடியமர்த்த அரசாங்கம் கணிசமான நடவடிக்கைகளை எடுத்துள்ள போதிலும், கணிசமானதொகையினர் இன்னமும் இடம்பெயர்ந்த நிலையிலேயே தொடர்வதாகவும், இருப் பிடங்களுக்கு திரும்பிய பலர் மோசமான நிலையில் இன்னமும் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்

No comments:

Post a Comment