யாழ்ப்பாணத்தில் காணாமற்போனவர்களின் உறவினர்கள் இன்று வெள்ளிக்கிழமை நடத்திய கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது சிறிலங்கா காவல்துறையினர் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர். பொது மக்கள் சற்றும் எதிர்பாராத வேளையில் காவல்துறையினர் மனிதாபிமானமின்றி மேற்கொண்ட இந்தத் தாக்குதல்களால் பல பெண்கள் உடற்காயங்களுக்கு இலக்காகியுள்ளனர்.

குறிப்பாக இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மீது ஆண் காவல்துறையினர் கடும் தாக்குதல்களை நடத்தியிருக்கின்றனர். இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திய ஆண் காவல்துறையினர் பெண்களின் மார்புப் பகுதிகளில் பிடித்திழுத்து அவர்களைத் தாக்கியிருக்கின்றனர்.

பிரித்தானியப் பிரதமர் டேவிற் கமரூன் இன்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த நிலையில் இங்கு காணாமற்போனோhரின் உறவினர்கள் நடத்திய போராட்டத்தின்போதே சிறிலங்கா காவல்துறையினர் சர்வதேச ஊடகவியலாளர்கள் முன்னிலையில் இந்த தாக்குதல்களை அரங்கேற்றியிருக்கின்றனர்.

பிரித்தானியப் பிரதமர் இன்று யாழ்ப்பாணத்திற்கு வருகை தருவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், யாழ்ப்பாணத்தில் காணாமற்போனோரின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர். இந்தப் போராட்டம் இன்று யாழ்ப்பாணம் கோட்டைக்கு அருகில் உள்ள முனியப்பர் ஆலயத்திற்கு முன்பாக இடம்பெற்றது. இந்தப் போராட்டத்தில் பெரும் எண்ணிக்கையான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

சர்வதேச ஊடகவியலாளர்கள் முன்னிலையில் பொதுமக்கள் மீது சிறிலங்கா காவல்துறையினர் தாக்குதல்
நவ 16, 2013

குறிப்பாக, இராணுவத்தால் கணவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களின் கதி இன்னமும் என்ன என்று தெரியாத நிலையிலுள்ள அவர்களின் மனைவியர், மனைவியர் கடத்தப்பட்ட நிலையில் தவித்துக்கொண்டிருக்கும் கணவர்கள், அவர்களின் பிள்ளைகள், பிள்ளைகளைப் பறிகொடுத்த பெற்றோர், பெற்றோரைப் பறிகொடுத்த பிள்ளைகள், சசோதரர்களைப் பறிகொடுத்தோர் என்றவாறாக நூற்றுக்கணக்கானோர் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.

சில சுலோகங்களைக் கையில் தாங்கியிருந்த அவர்கள் காணாமற்போன தமது உறவுகளின் புகைப்படங்களையும் கைகளில் வைத்திருந்தனர். அவர்கள் காலை தொடக்கம் தமது உறவுகளை நினைத்து கதறியவாறு இருந்ததால் பெரிதும் களைத்துப்போயிருந்தனர். நீராகாரம் கூட இல்லாததால் மிகவும் சோர்வடைந்த நிலையில் காணப்பட்டனர்.

இந்த நிலையில் பிற்பகல் வேளை பிரித்தானியப் பிரதமர் யாழ்.பொது நூலகத்திற்கு வருகை தந்ததை அறிந்து அவரிடம் தமது மனக்குமுறல்களைத் தெரிவிப்பதற்காக இவர்கள் எழுந்து சென்றனர். இதன்போது சிறிலங்கா அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட குழுவொன்றும் அங்கு திடீரெனக் குழுமி நின்று “நாங்கள் இந்த நாட்டில் ஒரே மக்களாக ஒற்றுமையாக வாழ்கின்றோம். எங்களுக்குள் பிரச்சினைகள் இல்லையென்று” கோசங்களை எழுப்பினர். இவர்களில் சிலர் சற்று நேரத்தில் காணாமற்போனோரின் கவயீர்ப்புக்குள் நுழைந்து குழப்பங்களை ஏற்படுத்தினர். அங்கு வந்த சனல் 4 செய்தியாளர்களின் வாகனத்தை இவர்கள் தாக்க முற்பட்டனர்.

காணாமற்போனோருக்காக போராட்டம் நடத்தியவர்களே வாகனத்தை தாக்கியதாக அவர்கள் மீது குற்றச்சாட்டு விழட்டும் என்று கருதிய மகிந்தவின் அடிவருடிகள் இந்தச் செயல்களின் ஈடுபட்டனர். இந்த நெருக்கடிகளுக்கு மத்தியிலேயே சிறிலங்கா காவல்துறையினர் காணாமற்போனோரின் உறவினர் மீது கடும் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். பெண்கள் என்றும் பாராமல் அவர்களைத் தள்ளி வீழ்த்திய ஆண் காவல்துறையினர் அவர்களை சப்பாத்துக் கால்களால் மிதித்தனர். சிலரது கழுத்துக்களை பிடித்து திருகியிருக்கின்றனர். காணாமற்போன தனது தமையனின் படத்தைத் தாங்கியிருந்த 13 வயதுச் சிறுமி ஒருத்தி மீதும் இந்தக் காட்டுமிராண்டித்தனம் அரங்கேற்றப்பட்டிருக்கின்றது. அந்தச் சிறுமியைத் தள்ளி வீழ்;த்திய காவல்துறையினர் அவளைக் காலால் ஏறி மிதித்துள்ளனர். இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திய ஆண் காவல்துறையினர் பெண்களின் நெஞ்சில் (மார்பகங்கள் மீது) பலமாகத் தாக்கியுள்ளனர்.

பெண்கள் மீதான தாக்குதல்களைத் தட்டிக்கேட்கச் சென்ற வடக்கு மாகாண சபையின் பெண் உறுப்பினர் திருமதி அனந்தி சசிதரன் (எழிலன்) மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. காவல்துறையினர் தன்னைத் தள்ளி வீழ்த்தியதாகவும் அவர்களின் நான்கு அடி தன் மீது பலமாக வீழ்ந்ததாகவும் அனந்தி தெரிவித்தார். இந்தத் தாக்குதல் மிகவும் காட்டுமிராண்டித்தனமானது என்றும் அவர் தெரிவித்தார். பெண் காவல்துறையினர் இல்லாமல் அங்கு குவிக்கப்பட்டிருந்த ஆண் காவல்துறையினர் அங்கு கவனயீர்ப்பை நடத்திய பெண்கள் மீது தமது குரூரங்களை அரங்கேற்றியதாகவும் அனந்தி ஆவேசமாகத் தெரிவித்தார்.

இதேவேளை இந்தக் கவனயீர்ப்பு போராட்டத்தில் வடக்கு மாகாண சபையின் உறுப்பினர்களான ரவிகரன், கஜதீபன், சயந்தன் போன்ற பல உறுப்பினர்களும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் கலந்துகொண்டனர். இவர்களும் சிறிலங்கா பொலிஸாரின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களின் சிக்கியிருக்கின்றனர்.
No comments:
Post a Comment