Breaking News
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.
Sunday, December 29, 2013
ஆந்திரா ரெயில் தீ விபத்தில் 23 பேர் பலி
ஆந்திர பிரதேச மாநிலத்தில் ஓடும் ரெயிலில் தீப்பிடித்ததில், இரண்டு குழந்தைகள் உட்பட,குறைந்தது 23 பேராவது இதுவரை இறந்துள்ளனர் என்று செய்திகள் கூறுகின்றன.
ஆந்திர பிரதேசம் மாநிலம் வழியாகச் சென்று கொண்டிருந்த நன்டெட்-பெங்களூரு எக்ஸ்பிரஸின் ஒரு பெட்டியில் தீப்பிடித்தது என்று ரெயில்வே அதிகாரிகள் கூறுகின்றனர்.
இறந்தவர்களில் பலர் ரெயிலைச் சூழ்ந்த கரும்புகையினால் மூச்சடைப்பிற்கு உள்ளானதாக காவல் துறையினர் கூறுகிறார்கள்.
இந்தியாவில் ரெயில் விபத்துக்கள் ஏற்படுவது சகஜம் ( பழைய படம்)
தற்போது அணைக்கப்பட்ட இந்தத் தீ எப்படி மூண்டது என்பதற்கான காரணம் இன்னும் தெரியவில்லை.
இன்று காலை இந்திய நேரப்படி 3.30 மணி அளவில் குளிரூட்டப்பட்ட (ஏ.சி) பெட்டியில் இந்தத் தீ மூண்ட போது அதில் 60க்கும் அதிகமான பயணிகள் பயணித்து கொண்டிருந்தனர்.
மிகுந்த பனி மற்றும் பனிப்புகையினாலும் மீட்புப் பணிகள் பாதிக்கப்படுவதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
இறந்தவர்களின் மற்றும் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை இன்னும் தெளிவாகத் தெரியவில்லை .
இந்தியாவில் ஒரு நாளைக்கு 18 மில்லியன் பயணிகளை ஏந்திச் செல்லும் சுமார் 9000 பயணிகள் ரயில்களை கொண்ட இந்திய அரசுக்கு சொந்தமான ரயில் சேவைகளில் விபத்துகள் நடப்பது சகஜமானதாகும்.
கடந்த வருடம் ஆந்திரத்தில் ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் 47 பேர் வரை இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment